இந்தியாவின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆகஸ்ட் மாதம் அறிவித்ததால் அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும் ஐ.பி.எல் போட்டியில் அவரது ஆட்டத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். அனைவராலும் விரும்பப்பட்ட வீரர்களில் ஒருவரான தோனி, தற்போது ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டியின் இந்த 13வது சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக அணியை வழிநடத்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான தோனி, தனது இன்னிங்ஸை பிராண்ட் ஒப்பந்தங்களில் தொடர்வாரா? என்ற ஊகங்களும் எழுந்துள்ளன. ஆனால் பல்வேறு நிறுவனத் தயாரிப்புகளின் விளம்பரத் தூதராக சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். ரெடிப் டாட் காம் இன் கூற்றுப்படி, தோனி தனது விளம்பர ஒப்பந்தத்துக்கான விலையை குறைத்துள்ளார்.
மேலும், முன்பை விட அதிக ஒப்பந்தங்களைச் செய்கிறார். டெல்லியை சேர்ந்த ரிட்டி ஸ்போர்ட்ஸின் விளம்பரதாரர் அருண் பாண்டே என்பவர், தோனி இந்தியாவுக்காக தவறாமல் விளையாடும்போது, ஒரு வருடத்தில் ஒப்பந்தங்களுக்கு மட்டும் 110 முதல் 130 நாட்கள் வரை கொடுப்பார் என்றார். அவர் மேலும் கூறுகையில், இப்போது ஸ்டார் பேட்ஸ்மேனாக 180 நாட்கள் தருகிறார். ஆகையால், ரிதி ஸ்போர்ட்ஸ் தோனியுடன் வணிக ஒப்பந்தங்களை மேற்கொள்ள ஆர்வங்களைக் கொண்டுள்ளது.
பாண்டே மற்றும் தோனி, ஃபிட் 7 மூலம் ஏற்கனவே வைத்திருக்கும் உடற்பயிற்சி மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். தற்போது, அவர்களிடம் 20 உடற்பயிற்சி மையங்கள் உள்ளன. மேலும் அதை 50ஆக உயர்த்த யோசித்து வருகின்றனர். “ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் சிறப்பாக்குங்கள்” என்ற முழக்கத்துடன் ஆன்லைனில் அவர்கள் உடற்பயிற்சி மூலம் வணிகம் செய்து வருகின்றனர்.
POINTS TABLE:
மேலும், முன்னதாக ரன்வீர் சிங், அக்ஷய் குமார் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு நிகரானத் தொகையை தோனி முன்பு வசூலித்ததாகவும். அதுமட்டுமன்றி தோனி ஓய்வுக்குப் பிறகு அவர் விளம்பர ஒப்பந்தத்துக்கான விலையை குறைத்துள்ளார். அது இப்போது அமிதாப் பச்சன் அல்லது ஆயுஷ்மான் குர்ரானாவுக்கு ஏற்ப உள்ளது என்று மொகே மீடியாவின் தலைவர் சந்தீப் கோயல் கூறினார்.
PURPLE CAP:
எம்.எஸ்.தோனியின், தி அன்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தின் தொடர்ச்சிக்கான திட்டங்கள் இருப்பதாக தகவல்கள் உள்ளன. ரிட்டி ஸ்போர்ட்ஸ் தோனியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை தயாரித்துள்ளது. தோனியின் கதாபாத்திரத்தை திரையில் அழியா விதமாக நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அகால மறைவுக்குப் பிறகு அவர்களின் திட்டங்களைத் தொடர்வதில் பல சிக்கல்கள் உள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.