விளையாட்டு

  • associate partner
Home » News » Sports » IPL IPL 2020 AAKASH CHOPRA PICKS CSK IDEAL PLAYING XI VJR

சி.எஸ்.கே அணியில் களமிறங்கும் 11 வீரர்கள் இவர்கள் தான்.. பிரபல வீரர் கணிப்பு

IPL 2020 | அபுதாபியில் தொடங்கும் முதல் போட்டியில் சென்ன, மும்பை அணிகள் மோதுகின்றன.

சி.எஸ்.கே அணியில் களமிறங்கும் 11 வீரர்கள் இவர்கள் தான்.. பிரபல வீரர் கணிப்பு
சென்னை அணி
  • News18 Tamil
  • Last Updated: September 10, 2020, 2:47 PM IST
  • Share this:
இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா சி.எஸ்.கே அணியில் விளையாடும் 11 வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

ஐ.பி.எல் 2020 தொடர் வரும் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அபுதாபியில் தொடங்கும் முதல் போட்டியில் சென்ன, மும்பை அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல் தொடருக்கான பயிற்சியில் அனைத்து அணிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சி.எஸ்.கே அணியில் மூத்த வீரர்கள் ரெய்னா, ஹர்பஜன் சிங் விலகி உள்ள நிலையில் அணியில் இடம்பெற உள்ள 11 வீரர்கள் யார் என்பது இதுவரை கேள்விக்குறியாகவே உள்ளது.


இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா சி.எஸ்.கே அணியில் இடம்பெற உள்ள 11 வீரர்களின் பெயரை வெளியிட்டுள்ளார்.

ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, டூ பிளெசிஸ், கேதார் ஜாதவ், எம்.எஸ். தோனி, ரவீந்திர ஜடேஜா, பிராவோ, இம்ரான் தாஹிர், பியூஷ் சாவ்லா, தீபக் சாஹர், ஷார்துல் தாகூர் ஆகியோர் அவரது அணியில் இடம் பெற்றுள்ளார்.

மேலும் மகேந்திர சிங் தோனி 5-வது வீரராக களமிறங்க வேண்டும். 10 - 11 ஓவர்கள் முடிந்த பின் அவர் எந்த வரிசையில் வேண்டுமானாலும் களம் இறங்கலாம் என்றும் சோப்ரா தெரிவித்துள்ளார்.சி.எஸ்.கே அணியிலிருந்து விலகிய ரெய்னா, ஹர்பஜன் சிங்கிற்கு பதிலாக இதுவரை மாற்று வீரர்கள் அறிவிக்கப்படவில்லை. என்னை மீண்டும் சி.எஸ்.கே அணியில் பார்க்கலாம் என்று ரெய்னா தெரிவித்திருந்த நிலையில் இதுவரை அவரை அணிக்கு திரும்புமாறு எந்த அறிவிப்பு வெளியாகமல் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
First published: September 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading