விளையாட்டு

  • associate partner

MIvsKXIP | பரபரப்பாக நடைபெற்ற பஞ்சாப் - மும்பை போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது

IPL 2020 | கேப்டன் கே.எல்.ராகுல் மட்டும் தனியாளாக நிலைத்து நின்று போராடி 51 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்த போது பும்ராவின் யாக்கரில் சிக்கி அவுட்டானார்.

MIvsKXIP | பரபரப்பாக நடைபெற்ற பஞ்சாப் - மும்பை போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது
  • Share this:
ஐ.பி.எல் 2020 தொடரின் 36-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. துபாயில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

மும்பை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் டீ-காக் களமிறங்கினார். ரோஹித் சர்மா ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த சூர்யாகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார். 4-வது வீரராக களமிறங்கிய இஷான் கிஷானும் 7 ரன்களில் அவுட்டானார்.

மற்றொரு தொடக்க வீரரான டீ-காக் நிதானமாக விளையாடி 43 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து அவுட்டானார். இறுதி ஓவர்களில் பொல்லார்டு மற்றுர் குல்டர் நைல் அதிரடியாக விளையாடி மும்பை அணியின் ரன்டேட்டை அதிகரித்தனர்.


பொல்லார்டு 12 பந்துகளில் 4 சிக்சர், 1 பவுண்டரி என 34 ரன்கள் குவித்தார். இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணி சார்பில் முகமது ஷமி மற்றும் ஆர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். மயங்க் அகர்வால் 11 ரன்னில் பும்ரா பந்தில் போல்டாகி வெளியேறினார். அடுத்து வந்த கெயல், பூரான் இருவரும் 24 ரன்களில் அவுட்டாகினர்.

ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் டக் அவுட்டாகி வெளியேறியதால் பஞ்சாப் அணி இலக்கை எட்ட தடுமாறியது. ஆனால் கேப்டன் கே.எல்.ராகுல் மட்டும் தனியாளாக நிலைத்து நின்று போராடி 51 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்த போது பும்ராவின் யாக்கரில் சிக்கி அவுட்டானார்.பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கடைசி ஓவரில் பஞ்சாப் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.
First published: October 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading