ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஐபிஎல் கிரிக்கெட்டில் இனி வீசப்படும் ஒவ்வொரு பந்தின் வர்த்தக மதிப்பு ரூ.49 லட்சம்

ஐபிஎல் கிரிக்கெட்டில் இனி வீசப்படும் ஒவ்வொரு பந்தின் வர்த்தக மதிப்பு ரூ.49 லட்சம்

ஐ.பி.எல்

ஐ.பி.எல்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஐபிஎல் மீடியா ரைட்ஸ் விற்பனை மூலம் பிசிசிஐ-க்கு ரூ.48,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஸ்டார் இந்தியா தொலைக்காட்சி பேக்கேஜ் ஏ உரிமையை INR 23,575 கோடிக்கு வாங்கியது, அதே நேரத்தில் B மற்றும் C ஆனது டிஜிட்டல் உரிமைகளுக்காக பிரத்தியேகமாக INR 23,758 கோடிக்கு ரிலையன்ஸ் ஆதரவுடைய Viacom-18 க்கு சென்றது. பேக்கேஜ் D (வெளிநாட்டு ஒளிபரப்பிற்காக) டைம்ஸ் இணையத்திற்கு சென்றது.

ஊடக உரிமைகள் மூலம் பிசிசிஐ நேரடியாக 48,390 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது, இது ஒரு போட்டிக்கான ஊடக உரிமைகள் மூலம் கிடைக்கும் வருவாயை ரூ.118 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் தேசிய கால்பந்து லீக் தொடருக்கு அடுத்த இடத்தில் பணமழை கிரிக்கெட் லீகாக ஐபிஎல் ராட்சத உருவம் பெற்றுள்ளது.

எண்கள் என்பது மனித மனத்தின் பித்து, இதை இன்னும் உடைத்துப் பார்த்தால் ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியின் வர்த்தக மதிப்பு ரூ.118 கோடி, ஒரு ஓவரின் வர்த்தக மதிப்பு ரூ.2.95 கோடி, ஐபிஎல் தொடரின் ஒவ்வொரு பந்துக்குமான இனி வரும் வர்த்தக மதிப்பு ரூ.49 லட்சம்.

இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி மூலம் இன்னும் வருவாய் ஆதாரம் பெரிய அளவில் இருக்கிறது என்கிறார் ஜெய் ஷா. ஒவ்வொரு பந்தும் விலை மதிப்பில்லாது என்பது கிரிக்கெட்டின் தர அளவுகோல்கள் வைக்கும் ஒரு எல்லையற்ற மதிப்பீடு, ஆனால் பணம் பெருகிய பிறகு ஒவ்வொரு பந்துக்கும் வரையறுக்கப்பட்ட வர்த்தக மதிப்பு இப்போது ரூ.49 லட்சம்.

First published:

Tags: IPL, IPL 2022