ஐபிஎல் ஏலம் 2021: அடிப்படை விலையிலேயே சத்தேஸ்வர் புஜாராவை ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஐபிஎல் ஏலம் 2021: அடிப்படை விலையிலேயே சத்தேஸ்வர் புஜாராவை ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

சத்தேஸ்வர் புஜாரா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து கேதர் ஜாதவ், வாட்சன், பியூஷ் சாவ்லா, முரளி விஜய், மோனு சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

  • Share this:
இந்திய அணியின் மூத்த வீரர் சத்தேஸ்வர் புஜாராவை ஏலத்தில் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மினி ஏலம் சென்னையில் இன்று மாலை 3 மணியளவில் தொடங்கியது. பரபரப்பான இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் வீரர்களை ஏலம் எடுத்து வருகின்றன.

நடப்பாண்டு ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்றுள்ள 8 அணிகளும், தங்கள் அணியில் உள்ள தேவையற்ற வீரர்களை வெளியேற்றி தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை கடந்த மாதம் 20தேதி வெளியிட்டது. அதன்படி 8 அணிகளும் சேர்ந்து 139 வீரர்களை தக்கவைத்துள்ளன, 57 வீரர்களை கழட்டிவிட்டுள்ளனர்.

இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் இருந்து 1,114 வீரர்கள் ஏலத்திற்கு பதிவு செய்தனர். இதிலிருந்து 292 வீரர்களை ஐ.பி.எல். நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. இதில் 164 இந்திய வீரர்களும், 125 வெளிநாட்டு வீரர்களும், 3 இணை நாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து கேதர் ஜாதவ், வாட்சன், பியூஷ் சாவ்லா, முரளி விஜய், மோனு சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதனால் சி.எஸ்.கே அணிக்கு 22.9 கோடி கைவசம் உள்ளது. மேலும் வெளியேற்றப்பட்ட வீரர்களுக்கு பதிலாக 7 உள்நாட்டு வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரரை ஏலத்தில் எடுக்கும் முனையில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலியை ரூ.7 கோடிக்கு சி.எஸ்.கே அணியினால் எடுக்கப்பட்டுள்ளார். இவரது அடிப்படை விலை ரூ.2 கோடிதான் கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் 4 கோடிக்கு ஏற்றியது. பிறகு ரூ.6 கோடிக்கு எகிறியது. பிறகு சிஎஸ்கே ரூ.7 கோடிக்கு டீலை முடித்தது. இதனால் சென்னை அணியில் ஒரு வெளிநாட்டு வீரருக்கான இடத்தை மொயின் அலி பிடித்துள்ளார்.

இந்த நிலையில் இந்திய அணியின் மூத்த வீரரான சத்தேஸ்வர் புஜாரவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. அவரின் அடிப்படை விலையான 50 லட்ச ரூபாய்கே டீல் முடிந்தது.

கடைசியாக 2014 ஐபிஎல் தொடரில் புஜாரா விளையாடியிருந்தார். இதுவரை 30 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று 390 ரன்கள் அடித்துள்ளார். 99.74 அவரது சராசரியாகும். ஒரு அரைசதமும் அடித்திருக்கிறார்.
Published by:Arun
First published: