Yash Dhull: கோலியுடன் நேரத்தை செலவிட ஆவலுடன் காத்திருக்கிறேன்
Yash Dhull: கோலியுடன் நேரத்தை செலவிட ஆவலுடன் காத்திருக்கிறேன்
யாஷ் துல்
ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி யாஷ் துல்லை வாங்கியது. இதற்கிடையில், யாத் துல் தனது ஐபிஎல் லட்சியங்கள் மற்றும் மூத்த அணிக்காக விளையாடுவது பற்றியும் விராட் கோலியுடன் உரையாடுவது பற்றியும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்தார்.
இந்த ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான (U19 உலகக் கோப்பை) உலகக் கோப்பையை இந்தியா வெல்ல வழிநடத்திய கேப்டன் யாஷ் துல். இது இந்தியாவின் ஐந்தாவது கிரீடம். யாஷ் துல்லுக்கு முன்பாக முகமது கைஃப், விராட் கோலி, உன்முக்த் சந்த், பிருத்வி ஷா ஆகியோர் இந்திய அணிக்கு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை வென்ற கேப்டன்கள் ஆவார்கள்.
யாஷ் துல் டெல்லி அணிக்காக ரஞ்சிக் கோப்பையிலும் விளையாடினார். அறிமுக போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்தார். ரஞ்சிக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். அவர் மூன்று போட்டிகளில் 479 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி யாஷ் துல்லை வாங்கியது. இதற்கிடையில், யாத் துல் தனது ஐபிஎல் லட்சியங்கள் மற்றும் மூத்த அணிக்காக விளையாடுவது பற்றியும் விராட் கோலியுடன் உரையாடுவது பற்றியும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்தார்.
யாஷ் துல் கூறியதாவது: “விராட் கோலியுடன் நேரத்தை செலவிட ஆவலுடன் காத்திருக்கிறேன். அவர்தான் என் இன்ஸ்பிரேஷன். அழுத்தமான சூழ்நிலைகளை அவர் எவ்வாறு கையாள்கிறார் என்பதை அவரிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டும். . நான் கேப்டனாக இருந்தபோது இந்திய அணியை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக்கு அழைத்துச் சென்றேன்.
எந்த வடிவமாக இருந்தாலும் என் ஆட்டம் பாதிக்காது, மாறாது. எனது பாணியில் மட்டுமே ஆடுவேன். நான் எந்த வடிவத்திலும் இப்படி விளையாட விரும்புகிறேன். அறிமுக போட்டியில் அழுத்தம் இல்லாமல் விளையாடினேன். சீனியர் அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது ஆசை. இது மூன்று வடிவங்களின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.''
ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடுவதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். ஏனென்றால் அது எனது சொந்த ஊர். அணியின் கேப்டன் ரிஷப் பந்த் எனக்கு ஒரு உத்வேகம். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது,
இம்மாதம் 26ஆம் தேதி ஐ.பி.எல். ஓப்பனிங் ஸ்லாட்டில் அவருக்கு இடம் இருக்கிறதா என்று தெரியவில்லை ஏனெனில் டெல்லி அணி டேவிட் வார்னர், பிருத்வி ஷா ஆகியோர் அடங்கிய அணியாகும்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.