பழைய தோனியா வருவீங்கன்னு பார்த்தா... துறவியா வந்திருக்கீங்க - என்னாச்சு தல

தோனி

தோனி மொட்டையடித்து க்ளீன் ஷேவ் செய்து புத்த துறவியைப்போன்று இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

 • Share this:
  கிரிக்கெட்டில் ‘மிஸ்டர் கூல்’ என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நம்ம தோனி. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வுபெற்றாலும் அவருக்கான மாஸ் இன்னும் குறையவில்லை. தோனி குறித்த ஒவ்வொரு விஷயங்களை ரசிகர்கள் ஆர்வமாக தேடிக்கொண்டிருக்கின்றனர். அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் களமிறங்குகிறார். தல தோனியை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

  தோனியின் பேட்டிங், அவரது லீடர்ஷிப் போன்றவற்றுக்கு எந்தளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதேஅளவுக்கு தோனியின் ஹேர்ஸ்டைலுக்கும் ரசிகர் பட்டாளம் உள்ளது. தோனி ஹேர்ஸ்டைலுக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுப்பார். விதவிதமான ஹேர்ஸ்டைலில் அவ்வப்போது ரசிகர்களுக்கு காட்சியளிப்பார். இந்நிலையில் தோனி மொட்டையடித்து க்ளீன் ஷேவ் செய்து புத்த துறவியைப்போன்று இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

  என்னப்பா ஆச்சு நம்ம தல தோனிக்கு அப்படின்னு ரசிகர்கள் குழம்பிபோய் உள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் விளம்பரத்துக்காக தோனி இப்படியான கெட்டைப்பை போட்டுள்ளாராம். ரசிகர்கள் கவலை கொள்ளும்படி ஒன்றும் இல்லையாம். அந்த விளம்பரத்தில் சில காட்சிகள் இப்போது வெளியாகியுள்ளது. ‘எனது மந்திரத்தின் பின்னால் உள்ள ரகசியம் விரைவில் தெரியவரும்” என தோனி பேசியுள்ளார். எப்பா ‘ஒரு நிமிஷம் தலையே சுத்திடுச்சு’என ரசிகர்கள் ரியாக்ட் செய்துவருகின்றனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: