• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • 5 ஆண்டுகளில் உலகக்கோப்பையை வெல்வார் என்று யார் நினைத்திருப்பார்கள்: கபில் தேவ் அறிமுகமான தினம்

5 ஆண்டுகளில் உலகக்கோப்பையை வெல்வார் என்று யார் நினைத்திருப்பார்கள்: கபில் தேவ் அறிமுகமான தினம்

கபில்தேவ்

கபில்தேவ்

அக்டோபர் 16ம் தேதி 1978, இந்திய கிரிக்கெட்டையே புரட்டிப் போட்ட ஆளுமை கிரிக்கெட் மைதானத்தில் அவதரித்த நாள், அதாவது டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக முதன்முதலில் அறிமுகமான ஆன நாள், அவர் யாராக இருக்க முடியும்? தி கிரேட் கபில் தேவ் தான். பாகிஸ்தானுக்கு எதிராக பைசலாபாத்தில் கபில் டெஸ்ட்டில் அறிமுகமான நாள் இன்றுதான்.

  • Share this:
    அக்டோபர் 16ம் தேதி 1978, இந்திய கிரிக்கெட்டையே புரட்டிப் போட்ட ஆளுமை கிரிக்கெட் மைதானத்தில் அவதரித்த நாள், அதாவது டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக முதன்முதலில் அறிமுகமான ஆன நாள், அவர் யாராக இருக்க முடியும்? தி கிரேட் கபில் தேவ் தான். பாகிஸ்தானுக்கு எதிராக பைசலாபாத்தில் கபில் டெஸ்ட்டில் அறிமுகமான நாள் இன்றுதான்.

    வேகப்பந்து வீச்சில் அவர் தீவிரமாக இருந்த நாட்களில் பயிற்சியில் ‘இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளரா?’ என்று கபிலை கிண்டலடித்தார்கள், ‘ஆல்ரவுண்டரா?’ என்றும் கேலி பேசப்பட்டார், ஆனால் அனைத்தையும் முறியடித்து அறிமுகமான 5 ஆண்டுகளில் கேப்டனாகி 1983-ல் உலகக்கோப்பையை, அதுவும் அசுர மே.இ.தீவுகளை வீழ்த்தி வெல்வார் கபில்தேவ் என்று யார் எதிர்பார்த்தார்கள்.

    ஆனால் அவரது அறிமுகப் போட்டி, பாகிஸ்தான் அணிக்கு எதிராக, இப்போதை விட அப்போது பாகிஸ்தான் உடன் போட்டி என்றால் உணர்ச்சி லெவல் வேறு மாதிரி இருக்கும், என்ன செய்வாரோ தெரியாது ஜெயித்தாக வேண்டும் என்பதுதான் இரு நாட்டு வீரர்கள் ரசிகர்களின் உணர்வு, தோற்றால் இருதரப்பிலும் ரசிகர்களிடையே சண்டைதான் வரும். மிகவும் கொதிப்பான இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் அது.

    இன்றைய தினத்தில் அறிமுகமான கபில்தேவ், அப்போது பெரிய ஆல்ரவுண்டர்களான இயன் போத்தம், ரிச்சர்ட் ஹாட்லி, இம்ரான் கான் ஆகியோருடன் போட்டியிட்டார். நிரூபித்தார்.

    1983 லார்ட்சில் கபில்தேவ் உலகக்கோப்பையை வென்ற போது வெள்ளைச்சீருடை


    முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் பிஷன் சிங் பேடி, பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அபாய வீரர்கள், சாதிக் முகமது இடது கை வீரர், மாஜித் கான், இவர் உலக தொடக்க வீரர்கள் பட்டியலில் கவாஸ்கர் போன்றோருடன் பெரிய அளவில் ஒப்பிட்டுப் பேசப்பட்டவர். கபில் தேவ் இவர்களுக்குத்தான் வீசினார். ஆனால் முதல் இன்னிங்சில் ஆக்ரோஷம் காட்டினார் விக்கெட் இல்லை, 16 ஓவர் 71 ரன்கள் என்று ரன்கள் கொடுத்தார், ஆனால் முதன் முதலாக இந்திய பவுலர் ஒருவர் பவுன்சர் வீசி பாகிஸ்தான் வீரர் சாதிக் முகமது ஹெல்மெட்டில் பட்டுச் சென்றது, உடனே விக்கெட் கீப்பர் கிர்மானி, ‘இன்னொண்ணு போடு’ என்று கபிலிடம் கூறியது மறக்க முடியாது கூற்று.

    பேட்டிங் இறங்கிய கபில் 2 பவுண்டரிகள் அடித்து 8 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் 2வது இன்னிங்ஸில் சாதிக் முகமதுவை வீழ்த்தி தன் முதல் விக்கெட்டைக் கைப்பற்றினார் கபில் தேவ்.

    இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 503/8 டிக்ளேர் செய்தது. பாகிஸ்தான் அணிக்குக் கேப்டன் முஷ்டாக் அகமது. முதல் இன்னிங்சில் ஜாகீர் அப்பாஸ் 196 ரன்கள் விளாச, மியாண்டட் 154 நாட் அவுட். இந்தியா தன் முதல் இன்னிங்ஸில் 462/9 டிக்ளேர், கவாஸ்கர் 89, குண்டப்பா விஸ்வநாத்தின் மிக அருமையான சதம், அவர் 145 ரன்கள் எடுக்க திலிப் வெங்சர்க்கார் 83 ரன்களை எடுத்தார்.

    தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்ஸில் 264/4 டிக்ளேர் செய்தது, ஆசிப் இக்பால் சதம் எடுத்தார், இந்த இன்னிங்ஸில்தான் சுனில் கவாஸ்கர் தன் வாழ்நாளின் ஒரே டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றினார். ஜாகீர் அப்பாஸ் 96 என்று இரண்டாவது இன்னிங்சிலும் சதம் எடுக்கும் தருணத்தில் கவாஸ்கரின் ஒரே விக்கெட்டாக வீழ்ந்தார். இந்த டெஸ்ட் போட்டி ட்ரா ஆனது.

    முதல் டெஸ்ட் கபிலுக்கு இப்படி முடிந்தாலும் இந்தத் தொடரில் கபில்தேவ் 159 ரன்களையும் 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். ஆனால் தொடரை பாகிஸ்தான் 2-0 என்று கைப்பற்றியது. கபில் தேவ் அறிமுக நாளை மறக்க முடியுமா? சச்சின் டெண்டுல்கர் அறிமுக நாளையும் தான் மறக்க முடியுமா?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: