தன்னுடைய விரலில் ஏற்பட்டுள்ள காயத்திலிருந்து மீள வேண்டும், மனரீதியாக நலம்பெற வேண்டும் என்பதால், காலவரையற்ற ஓய்வு எடுத்துக்கொள்வதாக ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கும் நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு பேரிடியாக இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியாவுடனான டெஸ்ட் தொடர், ஐபிஎல் டி20 போன்றவற்றிலும் பயோ-பபுள் சூழலில் இருந்தார். இதற்கிடையே நியூஸிலாந்தில் இருக்கும் தனது குடும்பத்தினரைச் சந்திக்க கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை, அதன்பின் ஸ்டோக்ஸின் தந்தை காலமானார்.
இந்த ஆண்டு கோடைகாலம் முழுவதும் விரல் காயத்தால் அவதிப்பட்ட ஸ்டோக்ஸ் மெதுவாகவே குணமடைந்தார். அதன்பின் இங்கிலாந்தில் துர்ஹாம் அணிக்காக உள்நாட்டு கவுண்டி அணியில் விளையாடி, மீண்டும் இங்கிலாந்து அணிக்குத் திரும்பினார்.
ஆனால், இங்கிலாந்து வீரர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு, இங்கிலாந்து லெவன் அணிக்கு கேப்டனாக ஸ்டோக்ஸ் செயல்பட்டு அணியை வழிநடத்தினார். இந்தத் தொடரை 3-0 என்ற கணக்கில் ஸ்டோக்ஸ் தலைமை வென்று கொடுத்தனர்.
இந்நிலையில் ஸ்டோக்ஸ் விரலில் மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது, தன்னுடைய குடும்பத்துடன் சிறிது காலத்தை செலவிட விரும்புவதையடுத்து, ஸ்டோக்ஸ் காலவரையற்ற ஓய்வை அனைத்துவிதமான கிரிக்ெகட்டிலிருந்தும் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் என்ன கூறுகிறது?
பென் ஸ்டோக்ஸ் முடிவுக்கு நாங்கள் முழுமையாக ஆதரவு தருகிறோம். சிறிது காலம் கிரிக்கெட்டிலிருந்து விலகி இருப்பது அவருக்கு நலமாக இருக்கும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தன்னுடைய உணர்வுகளையும், உடல் நலம், மனநலம் குறித்து வெளிப்படையாகக் கூறுவதில் ஸ்டோக்ஸ் துணிச்சலானவர்.எங்களுைடய வீரர்களின் மனரீதியான, உடல்ரீதியான நலன் மிகவும் முக்கியம். கரோனா சூழலுக்கு மத்தியில் எங்கள் வீரர்கள் போட்டிக்கும் தயாாரக வேண்டும், பாதுகாப்பாகவும் இருக்கவேண்டும். ஸ்டோக்ஸ் தனது தேவையான ஓய்வை எடுத்துக்கொண்டு அணிக்குத் திரும்பட்டும், என்று இங்கிலாந்து வாரியம் முழு ஆதரவு அளித்துள்ளது.
பென் ஸ்டோக்ஸுக்குப் பதிலாக இங்கிலாந்து அணியில் கிரெக் ஓவர்டன் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ben stokes, India Vs England, IPL 2021