விளையாட்டு

  • associate partner

ரஜினியின் மிரட்டலான வசனத்தை பதிவிட்டு சி.எஸ்.கே வெற்றியை கொண்டாடிய இம்ரான் தாஹீர்

IPL 2020 : சிறப்பாக விளையாடி 71 ரன்கள் குவித்த அம்பதி ராயுடு ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார்.

ரஜினியின் மிரட்டலான வசனத்தை பதிவிட்டு சி.எஸ்.கே வெற்றியை கொண்டாடிய இம்ரான் தாஹீர்
இம்ரான் தஹீர்
  • News18 Tamil
  • Last Updated: September 20, 2020, 5:31 PM IST
  • Share this:
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சி.எஸ்.கே அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியை கொண்டாடும் விதமாக ரஜினி நடித்த பேட்ட பட வசனத்தை தென்னாப்பிரிக்கா வீரர் இம்ரான் தஹீர் தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அபுதாபியில் நேற்று தொடங்கிய ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் சி.எஸ்.கே அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய சி.எஸ்.கே அணி அம்பதி ராயுடுவின் அதிரடியான ஆட்டத்தால் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடி 71 ரன்கள் குவித்த அம்பதி ராயுடு ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார்.




சி.எஸ்.கே-வின் வெற்றியை கொண்டாடும் வகையில் தென்னாப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹீர் பேட்ட படத்தில் ரஜினி பேசும், திரும்பவும் நீ எங்கள தொட்டுற கூடாது. தொட்டுட்ட, தொட்டவனா நாங்க என்னைக்கும் விட்டாதே இல்லை... என்று வரும் வசனத்தை பதிவிட்டுள்ளார்.



மும்பை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இம்ரான் தஹீர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.
First published: September 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading