2022-ல் தோனி விளையாடலேன்னா நானும் ஆடமாட்டேன் - வைரலாகும் ரெய்னாவின் பழைய பேட்டி
2022-ல் தோனி விளையாடலேன்னா நானும் ஆடமாட்டேன் - வைரலாகும் ரெய்னாவின் பழைய பேட்டி
தோனி-ரெய்னா
ரெய்னாவின் பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி தன் நல்ல நண்பர் என்று கூறும் ரெய்னா...
ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் நடந்த ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில், பத்து ஐபிஎல் உரிமையாளர்கள் பணத்தை வாரி இறைத்தாலும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா விற்கப்படாமல் போனார். இது சின்ன தல ரெய்னாவின் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாகி அவர்களும் ஏற்றுக் கொண்டு ரெய்னாவுக்கு பிரியாவிடை கொடுத்து வருகின்றனர்.
முதல் நாளில் விற்பனையாகாமல் போன பிறகு, ரூ.2 கோடி அடிப்படை விலையாக இருந்த ரெய்னா ஏலத்தின் கடைசி நாளிலும் உரிமையாளர்களால் புறக்கணிக்கப்பட்டார், இதன் பொருள் ரெய்னா முதல் முறையாக ஐபிஎல் ஏலத்தில் விற்கப்படாமல் போனார்.
2008ல் போட்டி தொடங்கியதில் இருந்து ரெய்னா தவறவிட்ட இரண்டாவது ஐபிஎல் சீசன் இதுவாகும். 2020-ல் அவருக்கும் தோனிக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அங்கிருந்து வந்தார், பிறகு மனக்கசப்பு தீர்ந்து அடுத்த தொடரில் ஆடினார்.
தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருண்டு ஓய்வு அறிவித்த ஆகஸ்ட் 15 அன்று இவரும் சிறிது நேரத்திலேயே தன் சர்வதேச கிரிக்கெட் ஓய்வையும் அறிவித்து தோனியை நெகிழ்ச்சியடைய வைத்தார்.
இந்நிலையில், ரெய்னாவின் பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி தன் நல்ல நண்பர் என்று கூறும் ரெய்னா, தோனி ஐபிஎல் 2022 இல் இடம்பெறவில்லை என்றால் நான் விளையாட மாட்டேன் என்று கூறியிருந்தார். 2021ல் சிஎஸ்கே பட்டத்தை வென்றால், தோனியை 2022ல் விளையாட சம்மதிக்க வைப்பேன் என்றும் அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
“அடுத்த சீசனில் தோனி பாய் விளையாடவில்லை என்றால், நானும் விளையாட மாட்டேன். நாங்கள் 2008ல் இருந்து விளையாடி வருகிறோம் (CSKக்காக)… இந்த ஆண்டு நாங்கள் வெற்றி பெற்றால், அடுத்த ஆண்டும் விளையாட அவரை சம்மதிக்க வைப்பேன்…“என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன். அவர் விளையாட மாட்டார் என்றால், நான் எந்த ஐபிஎல் அணிக்காகவும் விளையாடுவேன் என்று நினைக்கவில்லை, ”என்று ரெய்னா நியூஸ் 24 ஸ்போர்ட்ஸிடம் கூறினார்.
மிஸ்டர் ஐபிஎல்- ரெய்னா 2021 இல் சிஎஸ்கே அணிக்குத் திரும்பினார், ஆனால் மோசமான சீசனாக அமைய அவர் 17.77 சராசரியில் 160 ரன்கள் மட்டுமே எடுத்தார். இப்போது வயது அவரது பக்கம் இல்லை, அது பண-நிறைந்த லீக்கில் ரெய்னாவின் பாதையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.