ஐ.பி.எல் ரத்தாகி இருந்தால் பி.சி.சி.ஐ-க்கு ₹4000 கோடி இழப்பு

ஐ.பி.எல்

நடப்பாண்டு ஐ.பி.எல் தொடர் ரத்தாகி இருந்தால் பி.சி.சி.ஐ-க்கு 400 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

 • Share this:
  கொரோனா வைரஸ் காரணமாக நடப்பாண்டு ஐ.பி.எல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. மார்ச் 29-ம் தேதி தொடங்க இருந்த ஐ.பி.எல் தொடர் கடைசி கட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

  கொரோனா பரவல் குறையாமல் இருந்ததால் இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் நடைபெறுமா என்பதே கேள்விகுறியாகவே இருந்தது. ஆனால் ஐ.பி.எல் இல்லாமல் இந்த ஆண்டு நிறைவு பெறாது என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார்.

  ஆஸ்திரேலயாவில் நடைபெற இருந்த டி20 உலக கோப்பை கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டதால் அந்த காலக்கட்டத்தில் ஐ.பி.எல் தொடரை நடத்தி முடிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளனர்.

  அதன்படி நடப்பாண்டு ஐ.பி.எல் தொடர் ஐக்கிய அமீரகத்தில் செப்டம்பர் 19-ம் தேதி முதல் போட்டி தொடங்கும் என்றும், நவம்பர் 8-ல் இறுதிப்போட்டில் நடக்கும் என்றும் ஐபிஎல் தலைவர் பிரஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். மொத்தம் 44 நாட்களில் 60 போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

  ஒரு வேளை இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் நடைபெறாமல் இருந்திருந்தால் பிசிசிஐ-க்கு 4000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும். ஒளிபரபரப்பு உரிமாக ஸ்டார் நிறுவனம் 3300 கோடி ரூபாய், டைட்டில் ஸ்பான்சரான விவோ 444 கோடி ரூபாய் மற்ற இதர ஸ்பான்சர்கள் மூலம் 170 கோடி ரூபாய் என 4000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும்.

  நடப்பாண்டு ஐ.பி.எல் தொடரை ஒளிபரப்ப ஸ்டார் நிறுவனம் பிசிசிஐ-க்கு 2000 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. மார்ச் 29-ம் தேதி ஐ.பி.எல் நடைபெறாததால் முன்பணத்தை திருப்பி கேட்டு சட்ட நடவடிக்கைகளில் ஸ்டார் நிறுவனம் ஈடுப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
  Published by:Vijay R
  First published: