களத்துக்கு தயாராகும் தல தோனி... பயிற்சியில் தீவிரம்: சி.எஸ்.கே ஷேர் செய்த படம்

தோனி

செப்டம்பர் ஐ.பி.எல் போட்டி தொடங்கவுள்ள நிலையில், சி.எஸ்.கே கேப்டன் தோனி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

 • Share this:
  கொரோனா தாக்கத்தால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. தற்போது சற்று இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய மூன்று நகரங்களில் நடைபெற உள்ளது. ஐபிஎல் 13 வது சீசனுக்கான அட்டவணை செப்டம்பர் 6ம் தேதி அறிவிக்கப்பட்டது.

  உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எம்.எஸ். தோனியின் ஆட்டத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த நிலையில், இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) மூன்று முறை வெற்றியாளரான எம்.எஸ். தோனியின் புகைப்படம் ஒன்று மஞ்சள் மற்றும் நீல நிற ஆடைகளை அணிந்திருந்த வகையில் ட்விட்டரில் பகிரப்பட்டது.

  எல்லாமே இந்த கண்களில்தான் என்று குறிப்பிட்டு சிஎஸ்கே அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்திருந்தது.  சென்னை சூப்பர் கிங் அணியால் பகிரப்பட்ட தோனியின் படத்தைப் பார்த்து அவரது ரசிகர்கள் நிச்சயமாக மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.

  சிஎஸ்கே, ஐபிஎல்லில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாகும். தோனி ஐபிஎல்லில் விளையாட இருப்பது அவரது ஓய்வூ அறிவிப்புக்குப் பிறகு மிகவும் வருத்தமடைந்துள்ள அவரது மில்லியன்கணக்கான ரசிகர்களுக்கு நிச்சயமாக உற்சாகத்தை தரும். சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி இதுவரை மூன்று சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ளார். தோனி தான் செல்லும் வழியில் சிஎஸ்கேவை பல வெற்றி பாதைகளுக்கு வழி நடத்தியுள்ளார்.


  இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டியிகள் செப்டம்பர் 19ம் தேதி அன்று அபுதாபியில் தொடக்க உள்ளது. முதல் நாள் போட்டியில் இரு பெரும் அணிகளும் எதிர்கொள்ள உள்ளனர். நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் மூன்று முறை சாம்பியன் வென்ற சிஎஸ்கே அணிகள் மோத உள்ளன.

  சர்வதேச கிரிக்கெட்டில் அவர் கடைசியாக தோன்றியது 2019 ஜூலை மாதம் நியூசிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதியில் தான். எனவே இந்த ஐ.பி.எல்லில் தோனியின் பங்கு உன்னிப்பாக கவனிக்கப்படும்.

  இந்த ஆண்டு போட்டிகள் பல கட்டுப்பாடுகளுடன்  நடத்தப்பட உள்ளது. வீரர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றுவதையும், அவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்தும் விளையாட உள்ளனர்.
  Published by:Karthick S
  First published: