T20 WC Ind vs Pak: எப்படியும் தோற்கத்தான் போறீங்க எதுக்கு ஆடிக்கிட்டு? வாக்ஓவர் கொடுத்துடுங்க- ஷோயப் அக்தரைக் கலாய்த்த ஹர்பஜன் சிங்
T20 WC Ind vs Pak: எப்படியும் தோற்கத்தான் போறீங்க எதுக்கு ஆடிக்கிட்டு? வாக்ஓவர் கொடுத்துடுங்க- ஷோயப் அக்தரைக் கலாய்த்த ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்.
துபாயில் அக்டோபர் 24ம் தேதி ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன, இதற்கான டிக்கெட்டுகள் விற்று விட்ட நிலையில் பாகிஸ்தான் நிச்சயம் தோல்வி அடையும் எதற்கு ஆடிக்கொண்டு என்ற ரீதியில் ஷோயப் அக்தரை ஹர்பஜன் சிங் கலாய்த்துள்ளார்.
துபாயில் அக்டோபர் 24ம் தேதி ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன, இதற்கான டிக்கெட்டுகள் விற்று விட்ட நிலையில் பாகிஸ்தான் நிச்சயம் தோல்வி அடையும் எதற்கு ஆடிக்கொண்டு என்ற ரீதியில் ஷோயப் அக்தரை ஹர்பஜன் சிங் கலாய்த்துள்ளார்.
ஏற்கெனவே இந்தப் போட்டிக்கான பில்ட் அப்கள் எக்கச்சக்கமாகப் போய்க்கொண்டிருக்கின்றன, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சும் விதமாக புகழ்பெற்ற அந்த மவ்கா மவ்கா விளம்பரத்தின் இன்னொரு வடிவத்தை வெளியிட்டு பாகிஸ்தானை நட்புக் கலாய்ப்பு செய்துள்ளது.
இந்நிலையில் கிரிக்கெட் ஆட்டம் என்றாலே புரொமோஷன் என்பதும் அடங்கும், இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு இவ்வளவு பில்ட் அப் தேவையில்லை, சிலவேளைகளில் பில்ட் அப் இல்லாத சில போட்டிகள் பிரமாதமாக இருக்கும். ஏனெனில் ஒருமுறை ஆஸ்திரேலியாவை ஜிம்பாப்வே வென்ற போட்டி என்ற சப்தமுமில்லாமல் அமைதியாகத்தான் நடத்தப்பட்டது.
“நான் ஷோயப் அக்தரிடம் கூறிவிட்டேன், விளையாடி என்ன பயன்? எப்படியிருந்தாலும் நாங்கதான் ஜெயிக்கப்போறோம் பாகிஸ்தான் தோற்கத்தான் போகிறது ஏன் விளையாட வேண்டும், தோற்க வேண்டும் பிறகு ஏமாற்றமடைய வேண்டும், பேசாமால் இந்தியா ஜெயித்து விட்டது என்று ஒப்புக் கொண்டு ஆடாமல் வாக் ஓவர் கொடுத்து விடுங்கள்.
எங்கள் அணி பயங்கர ஸ்ட்ராங் ஷோயப் அக்தர் உங்களுக்கு வெற்றிபெற வாய்ப்பேயில்லை. உங்களை ஊதிவிடுவோம்” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பகிர்ந்த வீடியோ ஒன்றில் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
ஆடவர் உலகக்கோப்பையில் இது வரை 50 ஓவராகட்டும் 20 ஓவராகட்டும் இந்தியாவை பாகிஸ்தான் ஜெயித்ததே இல்லை. கடைசியாக மான்செஸ்டரில் உலகக்கோப்பையில் வென்றதோடு 7முறை இந்தியா உலகக்கோப்பையில் பாகிஸ்தானை பந்தாடியுள்ளது.
2007 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் இருமுறை தோல்வி கண்டது, ஆனாலும் முதல் முறை உண்மையில் போட்டி டை தான் ஆனது, ஆனால் அப்போது சூப்பர் ஓவருக்குப் பதில் பவுல் அவுட் முறை இருந்ததால் இந்தியா பவுலர்கள் அனைவரும் ஸ்டம்பைத் தாக்க பாகிஸ்தான் பவுலர்கள் ஒருவர் கூட ஸ்டம்பை தாக்காமல் தோல்வி தழுவியது, பிறகு இறுதிப் போட்டியில் அந்த வெற்றியை மறக்கத்தான் முடியுமா என்ன?
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.