கிரிக்கெட் வரலாற்றில் ஐசிசி டி20 உலகக்கோப்பை (2007), 50 ஓவர் ஐசிசி உலகக்கோப்பை (2011), ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (2013) என 3 ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் எம்.எஸ்.தோனிதான்.
2013- ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற நாள் இன்றைய தினம்தான். அதை நினைவுகூரும் விதமாக ஐசிசி தன் சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் தோனியின் கோப்பையுடனான புகைப்படத்தைப் பகிர்ந்து ’ஹாட்ரிக் ஐசிசி கோப்பைகளை வென்ற முதல் கேப்டன் தோனி என்று புகழாரம் சூட்டி பதிவிட்டுள்ளது. இந்தப் பதிவுக்கு மட்டுமெ 3,996 கமெண்ட்கள் வந்துள்ளன.
இங்கிலாந்துடனான இந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி மழை காரணமாக 20 ஓவர் போட்டியாகக் குறைக்கப்பட்டது. முதலில் இந்திய அணியை இங்கிலாந்து ஏட் செய்ய அழைத்தது. தோனியே டக் அடிக்க இந்திய பேட்ஸ்மென்கள் சரியாக் ஆடவில்லை. விராட் கோலி மட்டுமே 34 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார், இந்தியா 129/7 என்ற குறைந்த ஸ்கோரைத்தான் எடுக்க முடிந்தது. ஷிகர் தவான் 24 பந்துகள்ல் 31 எடுத்தார். ரவீந்திர ஜடேஜா 25 பந்துகளில் 33 ரன்கள் விளாசினார்.
சரி இங்கிலாந்து சுலபமாக வென்று விடும் என்றுதான் அனைவரும் நினைத்தார்கள் ஆனால் அலிஸ்டர் குக் தலைமை இங்கிலாந்துக்கு சோதனை காத்திருந்தது. தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து 124/8 என்று முடிந்து அதிர்ச்சித் தோல்வி கண்டது. இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளை அதாவது இயான் மோர்கன், ரவி பொபாராவை வீழ்த்தினார். இந்த விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்த இங்கிலாந்தின் சரிவுக்கு இது ஆரம்பமானது. ஜடேஜா, அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த சாதனையைத்தான் ஐசிசி இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட அதற்கு பதில் அளித்த ஸ்டூவர்ட் பிராட், ‘5ம் நாள் டெஸ்ட் பிட்ச் போல் அப்படி ஸ்பின் ஆனது’ என்று பதிவிட்டுள்ளார்.
தோனியின் இந்தச் சாதனையை ஐசிசி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் வாழ்த்துக்களுடன் மகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.