Home /News /sports /

IPL 2022- நானாக இருந்தால் உம்ரன் மாலிக்கை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்வேன் - மாஜி இங்கிலாந்து பவுலர்

IPL 2022- நானாக இருந்தால் உம்ரன் மாலிக்கை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்வேன் - மாஜி இங்கிலாந்து பவுலர்

உம்ரன் மாலிக்

உம்ரன் மாலிக்

வெறும் வேகம் மட்டுமே அதுவே ஆட முடியாது என்று வெளுத்துக் கட்டிக்கொண்டிருக்கிறார் இந்த ஐபிஎல் பவுலிங் ஹீரோ காஷ்மீரத்தின் உம்ரன் மாலிக், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியையே வேறு லெவலுக்குக் கொண்டு சென்று கொண்டிருக்கிறார். நேற்று குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக எல்லோரது குச்சியையும் கழற்றி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஐபிஎல் கிரிக்கெட்டில் உம்ரன் மாலிக்கின் முதல் 5 விக்கெட் பவுலிங்காகும் இது.

மேலும் படிக்கவும் ...
    வெறும் வேகம் மட்டுமே அதுவே ஆட முடியாது என்று வெளுத்துக் கட்டிக்கொண்டிருக்கிறார் இந்த ஐபிஎல் பவுலிங் ஹீரோ காஷ்மீரத்தின் உம்ரன் மாலிக், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியையே வேறு லெவலுக்குக் கொண்டு சென்று கொண்டிருக்கிறார். நேற்று குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக எல்லோரது குச்சியையும் கழற்றி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஐபிஎல் கிரிக்கெட்டில் உம்ரன் மாலிக்கின் முதல் 5 விக்கெட் பவுலிங்காகும் இது.

    22 வயதான அவருக்கு ஐபிஎல் 2022 இல் சிறப்பான தொடக்கம் இல்லை, ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக 2/27 எடுத்ததில் இருந்து, காஷ்மீரைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் போட்டியில் முன்னேற்றம் அடைந்து வருகிறார். மறக்கமுடியாத 5 விக்கெட் ஸ்பெல்லுக்குப் பிறகு, அவர் இந்த சீசனில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் தனது ஹைதராபாத் அணி வீரர் மற்றும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜனுக்கு இணையாக இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார்.

    இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கிரேம் ஸ்வான் உம்ரன் மாலிக்கை வெகுவாக பாராட்டியுள்ளார். கிரிக்கெட்.காம் உடனான உரையாடலில், ஆண்டின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்ய வேண்டும் என்றால், சந்தேகத்திற்கு இடமின்றி உம்ரன் மாலிக்கை சேர்ப்பேன் என்றார்.

    கிரேம் ஸ்வான் கூறும்போது, “சந்தேகமே இல்லாமல், நான் உம்ரனை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்வேன். சந்தேகமே இல்லாமல்! இந்தியாவிடம் எல்லாம் இருக்கிறது ஆனால் வேகப்பந்து வீச்சாளர் இல்லை. பும்ரா வேகமானவர், ஆனால் அவர் உம்ரனைப் போல் வெளிப்படுத்தவில்லை. கூடிய விரைவில் அவரை ஈடுபடுத்துங்கள். அவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு எளிதாக சிறந்து விளங்குகிறார்.

    “உம்ரன் பந்துகள் விரைந்து வருகின்றன. ஐபிஎல் தொடக்கத்தில், அவர் வேகமாக இருந்தார் ஆனால் கொஞ்சம் அடி வாங்கினார். அவரை முதலில் பந்து வீசச் சொன்னேன், அதுதான் அவருடைய ஆயுதம் என்று டேல் ஸ்டெய்ன் கூறியதைக் கேட்டதும், எனக்கு உற்சாகமாக இருந்தது.

    உம்ரன் மாலிக் மிக விரைவாக வீசகிறார், அதற்காக காட்டுத்தனமாக வீசுவதில்லை, நேராக வீசுகிறார். முதல் பந்து தீப்பொறி பறந்தது, ஹர்திக் பாண்டியா ஆடிப்போய்விட்டார். அதன்பின் வேகமான ஷார்ட் பந்து வீச்சில் ஹர்திக்கை வெளியேற்றினார். அவர் எவ்வளவு விரைவாக பந்துவீசினார் என்பதைப் பார்க்கப் பார்க்க ஆச்சரியம் ஏற்படுத்துகிறார்.

    இல்லை, காயங்கள் அவரை ஒன்றும் செய்யாது. பிரட் லீ, ஷோயப் அக்தர், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆகியோரை வைத்துப் பார்க்கும் போது வேகப்பந்து வீச்சாளராக, நிச்சயமாக நீங்கள் உடைந்து விடுவீர்கள் ஆனால் உம்ரன் டி20களில் மட்டுமே பந்து வீசுகிறார். இது அதிகபட்ச முயற்சியின் நான்கு ஓவர்கள், இது வேகப்பந்து வீச்சாளருக்கான சிறந்த ஓவர்கள் என்று நான் நினைக்கிறேன், வேகமாக பந்து வீசுங்கள், நினைக்க வேண்டாம். மற்ற வடிவங்களில் அவரை இப்போதைக்கு நுழைக்க வேண்டாம், டி20களில் விளையாடுங்கள், ”என்று ஸ்வான் மேலும் கூறினார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022

    அடுத்த செய்தி