ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இணைவேன் - ஏ.பி.டிவில்லியர்ஸ் அறிவிப்பால் ரசிகர்கள் குஷி

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இணைவேன் - ஏ.பி.டிவில்லியர்ஸ் அறிவிப்பால் ரசிகர்கள் குஷி

ஏ.பி.டிவில்லியர்ஸ்

ஏ.பி.டிவில்லியர்ஸ்

நம் இரண்டாவது வீடான பெங்களூருவுக்கு திரும்பும் எண்ணம் தோன்றியது, சின்ன ஸ்வாமி ஸ்டேடியம் நிரம்பி வழியும் கூட்டத்தைப் பார்க்க ஆசைப்படுகிறேன். மீண்டும் வர விரும்புகிறேன், அதை எதிர்நோக்கியும் இருக்கிறேன்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்பேன் என்று தென் ஆப்பிரிக்காவின் அதிரடி மன்னனும், 360 டிகிரி வீரர் என்று பெயர் பெற்றவரும், ஆர்சிபி அணிக்கு ஆடியவருமான ஏ.பி.டிவில்லியர்ஸ் அறிவித்துள்ளதையடுத்து ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி பிறந்துள்ளது.

கடந்த ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக ஏபி டி வில்லியர்ஸ் அறிவித்தார். கேப்டன் விராட் கோலியும் கேப்டன்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். இது அணிக்கு மிகவும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது, ஆனால் இன்று பின்னடைவு இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக டுபிளெசிஸ் கேப்டன்சியில் பிளே ஆப் சுற்றுக்கு ஆர்சிபி தகுதி பெற்றுள்ளது, வென்றால் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 2011-ல் டி வில்லியர்ஸை அணியில் சேர்த்தது. ஆர்சிபி அணியில் 11 சீசன்களில் விளையாடி உள்ளார். ஆர்சிபி அணிக்காக டி வில்லியர்ஸ் 156 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இரண்டு சதங்கள் மற்றும் 37 அரைசதங்கள் உட்பட 4,491 ரன்கள் குவித்தார். விராட் கோலி ஏற்கெனவே ஏ.பி.டிவிலியர்ஸ் வருகை குறித்து சூசகமாகத் தெரிவித்திருந்ததையும் டிவில்லியர்ஸ் குறிப்பிட்டார்.

இந்நிலையில் ஏ.பி.டிவில்லியர்ஸ் கூறியதாவது:

"விராட் கோலி அதை உறுதிப்படுத்தியதைக் கேட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உண்மையைச் சொல்வதென்றால், நாங்கள் இன்னும் எதையும் முடிவு செய்யவில்லை. நான் நிச்சயமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருப்பேன். நான் எந்த பொசிஷனில் இருப்பேன் என்று எனக்குத் தெரியவில்லை,

பெங்களூரு மைதானத்தில் சில போட்டிகள் அடுத்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபிக்கு இருக்கலாம் என்று பட்சி ஒன்று ட்வீட் செய்ததைப் பார்த்தேன் உடனே நம் இரண்டாவது வீடான பெங்களூருவுக்கு திரும்பும் எண்ணம் தோன்றியது, சின்ன ஸ்வாமி ஸ்டேடியம் நிரம்பி வழியும் கூட்டத்தைப் பார்க்க ஆசைப்படுகிறேன். மீண்டும் வர விரும்புகிறேன், அதை எதிர்நோக்கியும் இருக்கிறேன்.

என்றார் ஏ.பி.டிவில்லியர்ஸ்.

First published:

Tags: AB de Villiers, IPL 2022, RCB