ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு இடமளித்தார் ஹர்திக் பாண்டியா, அதான் சாம்பியன் - விருத்திமான் சஹா
ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு இடமளித்தார் ஹர்திக் பாண்டியா, அதான் சாம்பியன் - விருத்திமான் சஹா
விருத்திமான் சஹா
விருத்திமான் சஹாவை ஐபிஎல் 2022 ஏலத்தில் யாரும் ஏலம் எடுக்கவில்லை, எந்த அணி நிர்வாகமும் சஹா மீது நம்பிக்கை வைக்கவில்லை, குஜராத் டைட்டன்ஸும் முதல் தெரிவாக ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் மேத்யூ வேடையே விரும்பியது. ஆனால் அவர் பிரகாசிக்கவில்லை, அப்போதுதான் ஹர்திக் பாண்டியாவின் அந்த முடிவு சஹாவுக்கும் ஒளிபாய்ச்சியது, குஜராத் டைட்டன்ஸ் சாம்பியனாகவும் உதவியது.

ரிஷப் பண்ட் கலக்கல் இந்திய அணியை உந்தித் தள்ளியதால் சீராக ஆடும் விருத்திமான் சஹா புறக்கணிக்கப்பட்டார், ஒதுக்கப்பட்டார், அதோடு பத்திரிகையாளர் மூலம் அவமானப்பட்டார், இதோடு ஐபிஎல் அணிகளில் யாரும் இவரை எடுக்கவில்லை. ஆனால் குஜராத் டைட்டன்ஸ் வாழ்வளித்ததில் இவரும் மிகப்பிரமாதமாக ஆடினார், அதுவும் அந்த சிஎஸ்கேவுகு எதிராக எடுத்த சாத்துப்படி 67 ரன்களை மறக்க முடியாது.
ஐபிஎல் 2022 தொடரில் 11 போட்டிகளில் 317 ரன்களை 3 அரைசதங்களுடன் எடுத்தார் சஹா. இந்நிலையில் தன் மேல் நம்பிக்கை வைத்து தனக்கும் நம்பிக்கையை மீட்டுத் தந்ததற்காக கேப்டன் ஹர்திக் பாண்டியாவை புகழ்ந்து தள்ளியுள்ளார் விருத்திமான் சஹா.
பல்வேறு அணிகளிலிருந்து கழற்றி விடப்பட்டவர்கள் மீது ஹர்திக் பாண்டியா பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தினார், நம்பிக்கையை விதைத்தார். விடுவித்த வீரர்களை யாரும் நம்பவில்லை. ஏலம் முதல் நாளில் என்னை யாரும் வாங்கவில்லை.குஜராத் பிறகு வாங்கியது, முதலில் ஆட வாய்ப்புக் கிடைக்கவில்லை.
பிறகு ஹர்திக் பாண்டியா வந்தார், தொடக்க வீரராக பொறுப்பேற்றுக் கொள்ள என்னைக் கேட்டார். எனக்கும் தன்னம்பிக்கை மீண்டும் கிடைத்தது. இதை என்னால் மறக்க முடியாது. அவர் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை ஓரளவுக்கு திருப்திகரமாக என்னால் திருப்பி அளிக்க முடிந்தது.
இன்னும் சொல்லப்போனால் அணியில் அனைவருமே தங்கள் பங்கை சிறப்பாகச் செய்தனர், சாம்பியன் அணி ஆவதற்கு இதுதானே அவசியம். ஹர்திக்கிற்கு ஒரு அணியை எப்படி நிர்வகிப்பது என்பது தெரியும். முன்பு அமைதியில்லாமல் இருப்பார், ஆனால் இப்போது பெரிய மாற்றம் அடைந்துள்ளார்.
களத்தில் நிதானம் இழந்ததில்லை, அனைவரின் மீதும் நம்பிக்கை வைத்திருந்தார்” என்றார் விருத்திமான் சஹா.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.