சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மர்ம சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனா தனது U-19 நாட்களில் தன் உடற்தகுதி பிரச்சினைகளுடன் போராடியதாகத் தெரிவித்தார். இது அவரை தொடர்ந்து விளையாட்டிலிருந்து விலக்கி வைத்திருந்தது.
21 வயதான தீக்ஷனா 117 கிலோ எடையுடன் இருந்ததாகவும், விளையாட்டின் உடற்தகுதி அளவுகளி படி உடலை வடிவத்துக்க்குக் கொண்டு வர வேண்டியிருந்தது, இதற்காக கடுமையாகப் போராடியதாகத் தெரிவித்தார்.
மற்றபடி ஏமாற்றமளிக்கும் நடப்பு ஐபிஎல் சீசனில், சென்னையின் சக்சஸ்ஃபுல் பவுலரான தீக்ஷனா எட்டு போட்டிகளில், 19.75 சராசரி மற்றும் 7.41 என்ற சிறந்த சிக்கன விகிதத்தில் 12 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
“அப்போது நான் 117 கிலோவாக இருந்தேன் (U-19 நாட்கள்), அதனால் யோ-யோ டெஸ்டில் எனது எடை மற்றும் தோல் மடிப்புகளைப் போக்க கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. 2020 இல், நான் எல்லாவற்றையும் குறைத்து, எனது உடற்தகுதியை தேவையான நிலைக்குக் கொண்டு வந்தேன். நான் என் உடல் உழைப்பை அதிகரித்தேன். .
2017-18 ஆம் ஆண்டில், நான் U-19 அணியில் இருந்தேன், ஆனால் நான் சில முறை உடற்தகுதி சோதனைகளில் தோல்வியடைந்ததால் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. 2019 இல், நான் மூன்று நாள் போட்டிகளில் 10 ஆட்டங்களுக்கு தண்ணீர் சுமக்கும் நிலைக்கு ஆளாக வேண்டியிருந்தது. அதனால் நான் தோல்வியுற்றால், மீண்டும் தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் என் மீது நம்பிக்கை கொண்டிருந்தேன், ஒருபோதும் விடக்கூடாது என்ற மனப்பான்மையுடன் இருந்தேன். அதனால்தான் நான் 2022 இல் இங்கு இருக்கிறேன்.
2021 இல், நான் எனது இலங்கை அணிக்காக தேர்வு செய்யப்பட்டேன். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் ஆட்டத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இது குறிப்பிடத்தக்கது. 2021ல் டி20 உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக இருப்பேன் என்று நான் நினைக்கவே இல்லை.” என்றார் தீக்ஷனா
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.