ரபாடா, கிறிஸ் மோரிஸ் பவுலிங்கை புரட்டி எடுக்கும் இந்தப் பையன் யார்?- திராவிடிடம் ரிஷப் பந்த் குறித்துக் கேட்டு ஆச்சரியப்பட்ட இங்கிலாந்து வீரர்

ரபாடா, கிறிஸ் மோரிஸ் பவுலிங்கை புரட்டி எடுக்கும் இந்தப் பையன் யார்?- திராவிடிடம் ரிஷப் பந்த் குறித்துக் கேட்டு ஆச்சரியப்பட்ட இங்கிலாந்து வீரர்

ரிஷப் பந்த்.

ரிஷப் பந்த் தன் இஷ்டத்துக்கு நேதன் கூல்ட்டர் நைல், ரபாடா, கிறிஸ் மோரிஸ் ஆகியோரை வலைப்பயிற்சியில் தூக்கி தூக்கி மைதானம் நெடுக அடித்துக் கொண்டிருந்தார்.

  • Share this:
    டெல்லி கேப்பிடல்ஸ், டெல்லி டேர் டெவில்ஸ் ஆக இருந்த போது அந்த அணியின் நம்பிக்கை ஊக்குவிப்பாளராக இருந்த ராகுல் திராவிட் இடம் இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ், இன்றைய நட்சத்திரமான ரிஷப் பந்த் குறித்து அப்போதே ஆச்சரியமாகக் கேட்டதாகத் தெரிவித்துள்ளார்.

    கடந்த காலத்தில் ரிஷப் பந்த், சாம் பில்லிங்ஸ் டெல்லி அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடியுள்ளனர். இந்த முறை டெல்லி கேப்பிடல்ஸ் அணியினால் பில்லிங்ஸ் ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் சென்று கலக்கு கலக்கிய ரிஷப் பந்த் அன்று சென்னையில் முதல் டெஸ்ட் போட்டியில் இடது கை இங்கிலாந்து ஸ்பின்னர் ஜாக் லீச்சை சிக்சர்களாக அடித்து நொறுக்கி அவரது கிரிக்கெட் வாழ்க்கையையே முடிவுக்குக் கொண்டு வந்திருப்பார்.

    போதாதென்று அகமதாபாத்தில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் 82 பந்துகளில் அரைசதம் கண்டு நிதானித்த காளை பந்த் பிறகு கட்டவிழ்த்து விடப்பட்ட ஜல்லிக்கட்டு காளையாக சீறிப்பாய்ந்து 33 பந்துகளில் அடுத்த 50 ரன்களை அடித்து சதத்தை 101 பந்துகளில் எடுத்தார். இவரது இன்னிங்ஸினால் 121/5 என்று திணறிய இந்திய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 160 ரன்கள் முன்னிலை பெற்று பிறகு இங்கிலாந்தை 135 ரன்களுக்குச் சுருட்டி இன்னிங்ஸ் வெற்றி பெற்று 3-1 என்று தொடரில் வென்று ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற்றது.

    இந்நிலையில் அப்போதே சாம்பில்லிங்ஸ் ராகுல் திராவிட்டிடம் யார் இந்தப் பையன்? என்று சாம் பில்லிங்ஸ் விதந்தோதியுள்ளார்.

    அவர் கூறியதாவது:

    பந்த்துடன் 2 ஆண்டுகள் நான் டெல்லியில் ஆடும்போது ஆடியிருக்கிறேன். நான் ராகுல் திராவிட்டிடம் யார் இந்தப் பையன் என்று கேட்டேன். ரிஷப் பந்த் தன் இஷ்டத்துக்கு நேதன் கூல்ட்டர் நைல், ரபாடா, கிறிஸ் மோரிஸ் ஆகியோரை வலைப்பயிற்சியில் தூக்கி தூக்கி மைதானம் நெடுக அடித்துக் கொண்டிருந்தார்.

    நம்ப முடியாததாக இருந்தது. இன்று அவர் பெரிய கிரிக்கெட் வீரராகி விட்டார், மீண்டும் டெல்லி அணியில் அவருடன் ஆடுவதை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன், என்றார் சாம் பில்லிங்ஸ்.

    2017 ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் 14 போட்டிகளில் 366 ரன்கள் எடுத்தார், அடுத்த சீசனில் 684 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Muthukumar
    First published: