நான் ரஞ்சி கிரிக்கெட்டில் 100 சிக்சர்களுக்கும் மேல் விளாசியுள்ளேன்.. இதைப்பற்றி யாரும் பேச மாட்டார்கள்- செலக்டர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள்- ஷெல்டன் ஜாக்சன் புலம்பல்

ஷெல்டன் ஜாக்சன்

ஷெல்டன் ஜாக்சன் ஒரு சிறந்த பீல்டர், தேவைப்பட்டால் விக்கெட் கீப்பிங்கும் செய்யக்கூடியவர். ஆனால் ஜாக்சன், உனாட்கட் ஆகியோருக்கு இந்தியா மட்டுமல்ல இந்தியா ஏ அணியிலும் வாய்ப்புக் கிடைக்காதது மர்மமே.

 • Share this:
  ஐபிஎல் 2021 ஐபிஎல் ஏலத்தின் போது தனது அடிப்படை விலைக்கே கொல்கத்தா அணிக்கு ஏலம் போனார் சவுராஷ்டிரா வீரர் ஷெல்டன் ஜாக்சன். உள்நாட்டு கிரிக்கெட்டில் சீரான முறையில் ரன்களை எடுக்கக் கூடியவர்.

  ஆனால் இவருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை, சமீபத்தில் இன்னொரு சவுராஷ்டிரா வீரர் ஜெயதேவ் உனாட்கட் குறித்து அணித்தேர்வாளர் ஒருவர் கூறும்போது, 30 வயதைக் கடந்து விட்டார் இனி அவர் இந்திய அணிக்கு ஆடவே முடியாது, அவர் மீது முதலீடு செய்வதை விட இளம் வீரர்கள் மீது முதலீடு செய்வதைத்தான் தேர்வாளர்கள் விரும்புகின்றனர் என்று கூறினார்.

  இதனையடுத்து ஷெல்டன் ஜாக்சன் தேர்வுக்குழுவை கடுமையாகச் சாடினார். இந்தியா ஏ அணிக்காக இங்கிலாந்துக்கு எதிராக ஒரு போட்டியில் ஆடியுள்ளார் ஜேக்சன்.

  இவரை தொடர்ந்து புறக்கணிக்கக் காரணம் இவரது வயது 34 என்பதே. வயதைப் பொறுத்தவரை இந்திய மனநிலை ஓரவஞ்சனை கொண்டது, தோனிக்கு எத்தனை வயதானாலும் ஆட வாய்ப்பளிக்க வேண்டும், சச்சினுக்கு வாய்ப்பளிக்க வேண்டும், உனாட்கட் போன்ற, மற்றவர்களுக்கு வயதானால் வீட்டுக்குப் போக வேண்டியதுதான் என்பதுதான் இந்திய ரசிகர்கள், அணித்தேர்வுக்குழு மனப்பான்மையாக உள்ளது.

  Also Read: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்: 3 இறுதி ஆட்டங்கள் வேண்டும் என ரவி சாஸ்திரி வலியுறுத்தல்

  இந்நிலையில் ஷெல்டன் ஜாக்சன் கூறியதாவது:

  எனக்கு வயது 34. ஆனால் 22-23 வயதினரை விட நான் சிறப்பாக ஆடும்போது 30 வயதுக்கு மேல் ஆனால் அணியில் எடுக்கக் கூடாது என்று எந்த சட்டத்தில் எழுதி வைத்திருக்கிறது. இந்திய அணிக்கு 30 வயதுக்கு மேல் ஆனால் ஆட முடியாது என்று எந்த சட்டத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது?

  உங்களை ஜட்ஜ் செய்யும் இவர்களெல்லாம் யார்? அவர்கள் என்ன திறமை படைத்தவர்களா? எதை வைத்து தீர்மானிக்கிறார்கள் ரஞ்சி ஸ்கோர்? பிட்னெஸ்? 2-3 சீசன்களில் 800-900 ரன்களை எடுக்கும் போது பிட்னெஸ் இல்லாமல் இருக்க முடியுமா? இல்லையென்றால் நீடிக்க முடியாது.

  இந்த ஆண்டும் இதைச் செய்யவில்லையா? சையத் முஷ்டாக் அலி டிராபி, விஜய் ஹஜாரே டிராபி என்று நான் சிறப்பாக ஆடவில்லையா? கோவிட் போன்ற நிச்சயமற்ற காலங்களில் ரஞ்சி போட்டிகள் இல்லாத போது ஒருவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட், பிங்க் பந்து கிரிக்கெட், சிகப்புப் பந்து கிரிக்கெட் என எது கிடைத்தாலும் ஆட வேண்டியதுதான்.

  பேசுவது சுலபம், செய்வது கடினம். ஆனால் அதிர்ஷ்டகரமாக இந்த ஆண்டு நான் நன்றாக ஆடியுள்ளேன், அதனால்தான் பேசுகிறேன். நான் ஒரு சாதனை படைத்துள்ளேன், அதாவது ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் 100 சிக்சர்களுக்கும் மேல் அடித்துள்ளேன், இதைப்பற்றி யாரும் பேசுவதில்லை, இந்திய செலக்டர்கள் கண்டுக் கொள்ளக் கூட இல்லை. ரஞ்சி டிராபி போட்டியில் ரிஸ்க் எடுக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் என் பாணி ஆட்டம் ரிஸ்க் எடுப்பதாகும். இப்படி 30 வயதுக்கு மேல் ஆகி விட்டால் இந்திய அணிக்கு ஆட முடியாது என்பது என்ன எழுதப்படாத சட்டம்?

  இவ்வாறு புலம்பியுள்ளார் ஷெல்டன் ஜாக்சன்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  உள்நாட்டுக் கிரிக்கெட்டை தொடர்ந்து கூர்ந்து கவனித்தால் ஷெல்டன் ஜாக்சனின் ஆதங்கம் புரியவரும், தொடர்ந்து 2 சீசன்களில் 800க்கும் அதிகமாக ரன்கள் எடுத்துள்ளார். இவர் மற்றும் உனாட்கட் பந்து வீச்சினால் சவுராஷ்டிரா 2018-19 சீசனில் ரன்னர்களாகவும் அடுத்த தொடரில் ரஞ்சி சாம்பியன் ஆகவும் ஆனது.

  ஷெல்டன் ஜாக்சன் ஒரு சிறந்த பீல்டர், தேவைப்பட்டால் விக்கெட் கீப்பிங்கும் செய்யக்கூடியவர். ஆனால் ஜாக்சன், உனாட்கட் ஆகியோருக்கு இந்தியா மட்டுமல்ல இந்தியா ஏ அணியிலும் வாய்ப்புக் கிடைக்காதது மர்மமே.
  Published by:Muthukumar
  First published: