‘டி20 ஆடும்போது டெஸ்ட் ஃபார்ம் போய்விடுமோன்னு கவலை இருந்தது’-புஜாரா ஓபன் டாக்

புஜாரா.

என்னை ஏலத்தில் எடுத்தபோது ஐபிஎல் ஆக்‌ஷன் நடந்த அறையில் இருந்த அனைவரும் கைகளைத் தட்டியதாக என்னிடம் சொன்னார்கள்.

 • Share this:
  ஹனுமா விஹாரி ஐபிஎல் 2021 தொடரில் இடம் பெற்றிருக்க வேண்டும் என புஜாரா தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

  டெஸ்ட் பேட்ஸ்மேன் என்ற முத்திரை குத்தப்பட்ட புஜாரா, ஐபிஎல் தொடரில் புறக்கணிக்கப்பட்டு வந்தார். இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் நடக்கும் போது வெளிநாடுகளில் சென்று கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிக்கொண்டிருப்பார். நடப்பு ஐபிஎல் தொடரில் புஜாரா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 50 லட்சத்துக்கு எடுத்துள்ளது. சென்னை அணி புஜாராவை வாங்கியது அங்கிருந்த மற்ற அணி நிர்வாகிகள் கைகளைத் தட்டினர். ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் புஜாராவின் ஆட்டம் இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித்தந்தது. புஜாராவுடன் சேர்ந்து ஹனுமா விஹாரியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஐபிஎல் தொடரில் ஹனுமா விஹாரியும் இடம்பெற்றிருக்க வேண்டும் என தனது வருத்தத்தை புஜாரா வெளிப்படுத்தியுள்ளார்.

  இதுகுறித்து பேசியுள்ள புஜாரா, “ இந்திய அணிக்காக நான் என்ன செய்கிறேன் என்று கவனிக்கப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அதன் பலனாகத்தான் இப்போது நான் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. என்னை ஏலத்தில் எடுத்தபோது ஐபிஎல் ஆக்‌ஷன் நடந்த அறையில் இருந்த அனைவரும் கைகளைத் தட்டியதாக என்னிடம் சொன்னார்கள். நாம் இந்திய அணிக்காக ஒரு செயலை செய்யும்போது மக்கள் அதை விரும்புவார்கள். அணி நிர்வாகம் மட்டுமின்றி சகவீரர்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கடந்த சில ஆண்டுகளில் இந்திய அணியில் இருந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடாத ஒரு வீரர் என்றால் அது நானாகத் தான் இருந்திருப்பேன்.

  இந்த தருணத்தில் நான் ஹனுமா விஹாரியை மிஸ் செய்வதாக உணர்கிறேன். அவர் இப்போது இருந்திருக்க வேண்டும். இதற்கு முன்பு ஐபிஎல் போட்டிகளில் அவரின் பங்களிப்பு இருந்தது. கடந்த காலங்களில் டி-20 போட்டிகளில் விளையாடும் போது என்னுடைய டெஸ்ட் கிரிக்கெட்டில் பாதிப்பு ஏற்படுமோ என்ற கவலை இருந்தது. ஐபிஎல் கிரிக்கெட் முடிந்ததும் சில பிழைகள் ஏற்படும் அதனால் அந்த கவலை இருந்தது. எனது இயல்பான விளையாட்டு. எனது பலம் ஒரு போதும் என்னைவிட்டு போகாது என்பதை இப்போது உணர்ந்திருக்கேன்” எனத் தெரிவித்துள்ளார்.
  Published by:Ramprasath H
  First published: