முகப்பு /செய்தி /விளையாட்டு / இந்த பிளேயர் ஒன் டே மேட்சுக்கு லாயக்கில்ல, டி20யில் மட்டும் வச்சுக்கங்க- கவுதம் கம்பீர் சாடிய வீரர்

இந்த பிளேயர் ஒன் டே மேட்சுக்கு லாயக்கில்ல, டி20யில் மட்டும் வச்சுக்கங்க- கவுதம் கம்பீர் சாடிய வீரர்

கவுதம் கம்பீர்

கவுதம் கம்பீர்

ஐபிஎல் புகழ் வெங்கடேஷ் அய்யர் இன்னும் ஒருநாள் போட்டிகளில் ஆடுவதற்கான முதிர்ச்சியை எட்டவில்லை எனவே அவரை டி20களுக்கு மட்டும் வைத்துக் கொள்வதுதான் நல்லது என்கிறார் கவுதம் கம்பீர்.

  • Cricketnext
  • 1-MIN READ
  • Last Updated :

ஐபிஎல் புகழ் வெங்கடேஷ் அய்யர் இன்னும் ஒருநாள் போட்டிகளில் ஆடுவதற்கான முதிர்ச்சியை எட்டவில்லை எனவே அவரை டி20களுக்கு மட்டும் வைத்துக் கொள்வதுதான் நல்லது என்கிறார் கவுதம் கம்பீர்.

இரண்டு ஒருநாள் போட்டிகளில், வெங்கடேஷ் அய்யர் 24 ரன்கள் மட்டுமே எடுத்தார், அதே நேரத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் பந்துவீச வாய்ப்பு கிடைத்தபோது விக்கெட் எடுக்காமல் முடிந்தார். இதனையடுத்து கேப்டவுனில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் அவர் நீக்கப்பட்டார்.

ஹர்திக் பாண்டியாவின் சொதப்பல் மற்றும் காயம் காரணமாக வெங்கடேஷ் அய்யர் நீண்ட கால மாற்றாகக் கருதப்படுகிறார், ஆனால் இதுவரை இந்தியா அவரை ஆல்ரவுண்டராகச் சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டது. அவர் தனது ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸில் தொடக்க வீரராக விளையாடினார், அதே நேரத்தில் இந்திய அணியில் அவர் பின் மிடில் ஆர்டரில் பினிஷராகப் பயன்படுத்தப்பட்டார்.

ஐயருக்கு ODIகளில் விளையாடுவதற்கான முதிர்ச்சி இன்னும் வரவில்லை என்றும், T20I போட்டிகளில் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் கம்பீர் கருதுகிறார்.

வெங்கடேஷ் அய்யர்

இது தொடர்பாக கம்பீர் கூறியதாவது: “வெங்கடேஷ் அய்யர் டி20க்களில் மட்டுமே தேர்வு செய்யப்பட பரிசீலிக்க வேண்டும். ஏனென்றால் அவருக்கு ஒரு நாள் போட்டிக்கான முதிர்ச்சி இன்னும் வரவில்லை. 7-8 ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே அவரைப் பார்த்து சர்வதேச அளவில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

நீங்கள் ஐபிஎல் போட்டிகளை ஒரு அளவுகோலாக வைக்கிறீர்கள் என்றால் அவரை டி20 கிரிக்கெட்டில் விளையாட செய்யுங்கள். ஒருநாள் போட்டி என்பது முற்றிலும் மாறுபட்ட ஒன்று. என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸில் கம்பீர் கூறினார்.

ஐயர் ஐபிஎல்லில் ஓப்பன் செய்தவர், இப்போது மிடில் ஆர்டரில் விளையாடி வருகிறார். நீங்கள் அவரை ODI கிரிக்கெட்டுக்கு பரிசீலிக்கிறீர்கள் என்றால், அவரது ஐபிஎல் உரிமையாளரிடம் அவரை மிடில் ஆர்டரில் விளையாடச் செய்யச் சொல்லுங்கள். ஆனால் அவர் ஐபிஎல்லில் அந்த நிலையில் விளையாடினால், அவர் டி20க்கு மட்டுமே, அதுவும் தொடக்க வீரராக மட்டுமே வைக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.” என்றார் கவுதம் கம்பீர்.

First published:

Tags: Gautam Gambhir, IPL 2022