'தோனியாக இருக்க விரும்பவில்லை.. நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்'- சஞ்சு சாம்சன்
'தோனியாக இருக்க விரும்பவில்லை.. நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்'- சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்
ஷேன் வார்னே தலைமையில் முதலாவது ஐபிஎல் சீசனில் கோப்பையை கைப்பற்றிய ராஜஸ்தான் அணி அதன்பின்னர் ஒரு முறை கூட சாம்பியன் ஆகவில்லை. /i Dont think anyone can be like Dhoni says sanju Samson hrp
கேப்டன்சியில் தோனி போல் செயல்பட மாட்டேன் என இளம் வீரரான சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வருகிறார். ஐபிஎல் 2021-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சஞ்சு சாம்சன் வழிநடத்துவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு ஐபிஎல் புள்ளிப்பட்டியல் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட ராஜஸ்தான் அணியை சஞ்சு சாம்சான் மீட்பார் என அணி நிர்வாகம் நம்பிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள சஞ்சு சாம்சன், ‘எங்களுக்கு ஆதரவு அளித்துவரும் ஒவ்வொரு ரசிகர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். உங்களுக்காக நல்ல கிரிக்கெட்டை விளையாடி உங்களது முகத்தில் புன்னகையை வரவழைப்போம். நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். அணியை வழிநடத்த ஆவலாக உள்ளேன். யாரும் தோனி போன்று இருக்க முடியாது . நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். சஞ்சு சாம்சனே போதுமானதாக இருப்பார். அணி நிர்வாகம் ஆக்ஷனில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. எங்களுக்கு தேவையான வீரர்களை எடுத்துள்ளனர். இதில் ஒவ்வொரு வீரரின் பங்கும் முக்கியமானதாக இருக்கும்” என்றார்.
சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் பேடஸ்மேன் என்பதால் கேப்டன்ஸியில் தோனியுடன் ஒப்பீடு செய்து பேசியுள்ளார். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இவர் கேரள அணிக்காக விளையாடி வருகிறார். ஷேன் வார்னே தலைமையில் முதலாவது ஐபிஎல் சீசனில் கோப்பையை கைப்பற்றிய ராஜஸ்தான் அணி அதன்பின்னர் ஒரு முறை கூட சாம்பியன் ஆகவில்லை. பென் ஸ்டோக்ஸ், பட்லர், கிரிஸ் மோரீஸ் என தரமான வெளிநாட்டு வீரர்களை பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியின் மீட்பராக இருப்பாரா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.