நான் என் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு ஓவரில் 6 பவுண்டரிகளை விளாசியதில்லை ஆனால் அதை பிரிதிவி ஷா செய்து காட்டியுள்ளார், அவருக்கு என் வாழ்த்துக்கள் என்று அதிரடி மன்னன் விரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் 2021 தொடரின் அதிவேக அரைசதத்தை எடுத்தார் நேற்று அகமதாபாத்தில் பிரிதிவி ஷா, கொல்கத்தா அணியின் ஷிவம் மாவி பந்தை எடுத்துக் கொண்டு ஓடி வர ப்ளே என்றவுடன் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை விளாசினார் பிரிதிவி ஷா. அதோடு விடவில்லை, 41 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து இவர் ஆட்டமிழக்கும் போது டெல்லி அணிக்கு வெற்றிக்கு 28 பந்துகளில் 9 ரன்களே தேவை என்ற நிலையில் உறுதியாக விட்டுச் சென்றார்.
இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவி நிலைகுலைந்து போனார். ஐபிஎல் கிரிக்கெட்டில் இதற்கு முன்னர் அஜிங்கிய ரஹானே ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை ஐபிஎல் தொடரில் அடித்திருக்கிறார்.
டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாட் கமின்ஸ் விழுந்த 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி 4 ஓவ்ர் 24 ரன் 3 விக்கெட் என்று முடிந்தார்.
நேற்று 6 பவுண்டரிகளை விளாசிய பிரிதிவி ஷா இதற்கு முதல் போட்டியில் முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகளை விளாசினார். இப்படியாக பிரிதிவி ஷாவின் பேட்டிங் பெருமளவுக்கு சேவாக்கின் அதிரடி பேட்டிங்குடன் ஒப்பிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கிரிக்பஸ் ஊடகத்துக்கு சேவாக் கூறியதாவது:
ஒரு ஓவரில் அதாவது 6 பந்துகளில் 6 பவுண்டரி விளாசுகிறார் என்றால் ஒவ்வொரு பந்தையும் சரியான இடைவெளியில் அடிக்கிறார் என்று பொருள். அது அவ்வளவு எளிதல்ல.
நான் தொடக்க வீரராக இறங்கும் போது எல்லா பந்துகளையும் பவுண்டரி அனுப்பவே விரும்புவேன் அதுவும் ஒரு ஓவரில் 6 பவுண்டரி அடிக்க வேண்டும் என்று நிறைய முறை முயற்சித்துள்ளேன். ஆனால் 18-20 ரன்களையே எடுக்க முடியும்.
என்னால் 6 பவுண்டரிகள், 6 சிக்சர்களை அடிக்க முடியவில்லை. இதைச் சாதிக்க டைமிங் பிரமாதமாக இருக்க வேண்டும். அப்போதுதான் இடைவெளிகளைக் கண்டுப்பிடித்து பவுண்டரிக்கு அனுப்ப முடியும்.
பிரிதிவி ஷா அபாரம். கிரிக்கெட் மேட்ச் ஆடவந்தவர் போல் அவர் வருவதில்லை. யு-19 போட்டியில் ஷிவம் மாவியை ஆடியிருக்கும் அனுபவம் காரணமாக இருக்கலாம் அவர் எங்கு வீசுவார் என்று முன் கூட்டியே தெரிந்திருக்கலாம்.
நானும் வலையில் ஆஷிஷ் நெஹ்ரா பந்துகளை நிறைய ஆடியுள்ளேன், ஆனால் அவரை என்னால் ஒரு ஓவரில் 6 பவுண்டரிகள் அடிக்க முடிந்ததில்லை. பிரமாதமான இன்னிங்சை ஆடிய பிரித்வி ஷாவுக்கு ஹேட்ஸ் ஆஃப்.
இவ்வாறு கூறினார் சேவாக்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.