கட்டுக்கடங்காத காளை ரிஷப் பந்த் இல்லாத இந்திய அணியை நினைத்துப் பார்க்க முடியவில்லை: இங்கிலாந்து வீரர் இயன் பெல் சிலிர்ப்பு

கட்டுக்கடங்காத காளை ரிஷப் பந்த் இல்லாத இந்திய அணியை நினைத்துப் பார்க்க முடியவில்லை: இங்கிலாந்து வீரர் இயன் பெல் சிலிர்ப்பு

ரிஷப் பந்த்.

ரிஷப் பந்த் என்ற ஒரு வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ், கெவின் பீட்டர்சனுக்குப் பிறகு வந்தது வரட்டும் என்று அடித்து நொறுக்கும் வீரர். கடந்த ஆஸ்திரேலியா தொடர் முதல் இவரைக் கண்டாலே உலகம் நடுங்கும் அளவுக்கு பேட்டிங்கில் அதிரடி காட்டி வருகிறார்.

  • Share this:
    ரிஷப் பந்த் என்ற ஒரு வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ், கெவின் பீட்டர்சனுக்குப் பிறகு வந்தது வரட்டும் என்று அடித்து நொறுக்கும் வீரர். கடந்த ஆஸ்திரேலியா தொடர் முதல் இவரைக் கண்டாலே உலகம் நடுங்கும் அளவுக்கு பேட்டிங்கில் அதிரடி காட்டி வருகிறார்.

    அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவுட் ஆக்கினால்தான் உண்டு. ஒருமுறை சச்சின் டெண்டுல்கர் சென்னையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு மூன்றரை மணி நேரத்த்ல் 155 ரன்களை டெஸ்ட் போட்டியில் விளாசினார், இதில் 7 சிக்சர்கள், ஆஸ்திரேலியாவினால் ஒன்றும் செய்ய முடியவில்லை, ஷேன் வார்ன் பந்தெல்லாம் ஸ்டாண்டுக்கு அனுப்பப்பட்டது, அப்போது இயன் சாப்பல் வர்ணனையில் கூறினார், ‘விவ் ரிச்சர்ட்ஸ், கேரி சோபர்ஸ் போன்றவர்களையெல்லாம் கட்டுப்படுத்த முடியாது, அவர்களது விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தி வெளியே அனுப்புவதுதான் சிறந்தது’ என்றார்.



    அதுபோல்தான் இன்று ரிஷப் பந்த் சிம்ம சொப்பனாக திகழ்கிறார். 20 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்குள்ளேயே எந்தச் சூழ்நிலையிலிருந்தும் எதிரணியினரிடமிருந்து ஆட்டத்தைப் பறித்து இந்திய வெற்றியாக மாற்றும் மேட்ச் வின்னராக உருவெடுத்துள்ளார்.

    இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் இயன் பெல் கூறியதாவது:

    இங்கிலாந்து அணிக்கு எதிராகச் சமீபத்தில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஆட்டத்தைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போனேன். என்ன மாதிரியான வீரர் ரிஷப் பந்த். அரிதான திறமைகளைக் கொண்டிருக்கிறார். வரும் காலத்தில் ரிஷப் பந்த் இல்லாத இந்திய அணியைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. என்னைப் பொருத்தவரை இந்திய அணியின் எதிர்காலமாக இருக்கிறார், உலகளவில் சிறந்த வீரர்கள் ரிஷப்பந்தைச் சுற்றி உள்ளனர்.

    இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ரிஷப் பந்த்திடம் பேட்டிங்கில் முதிர்ச்சி காணப்பட்டது. நன்றாக ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தார், டெஸ்ட் போட்டியில் அடித்த சதம் அவருக்கு அதிகமான நம்பிக்கையளித்துள்ளது.

    ஆர்ச்சர் பந்தை ரிவர்ஸ் சிக்ஸ் விளாசிய பந்த்.


    இதுபோன்ற முதிர்ச்சியை இளம் வீரர்களிடம் காண்பது அரிதானது. இதுமிகவும் அரிதான புத்திசாலித்தனம். ரிஷப்பந்தின் வெற்றிகரமான கிரிக்கெட் வாழ்க்கை இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. ரிஷப்பந்த் ஆட்டத்தைக் காண வியப்பாகவும், மகிழ்சியாகவும் இருந்தது. உண்மையான மேட்ச் வின்னர் ரிஷப்பந்த் தான்.

    இங்கிலாந்து தொடர் ரிஷப் பந்த்துக்கு மிகச்சிறந்த தொடராக இருந்திருக்கும். டெஸ்ட், டி20, ஒருநாள் தொடர் அனைத்திலும் ரிஷப்பந்த் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார், ஆனால் அனைத்திற்கும் மேலாக அவரது அமைதிதான் அழகு.

    இவ்வாறு கூறினார் இயன் பெல்.
    Published by:Muthukumar
    First published: