• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இனிமேல் இந்தியில் பேச முடியாது... ஸ்டெம்ப் மைக்கில் பதிவான தோனியின் உரையாடல் - வைரல் வீடியோ

இனிமேல் இந்தியில் பேச முடியாது... ஸ்டெம்ப் மைக்கில் பதிவான தோனியின் உரையாடல் - வைரல் வீடியோ

மகேந்திர சிங் தோனி

மகேந்திர சிங் தோனி

ஆர்.சி.பி அணிக்கு எதிரான போட்டியில் இனிமேல் இந்தியில் பேச முடியாது என்ற தோனியின் உரையாடல் ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகி உள்ளது.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடரின் ஞாயிற்று கிழமை நடைபெற்ற லீக் போட்டியில் ஆர்சிபி அணியை சிஎஸ்கே 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆர்சிபி அணிக்கு எதிராக பேட்டிங், பவுலிங், ஃப்ல்டிங் என அனைத்தில் அசத்திய ஜடேஜா அரைசதம், 2 விக்கெட், ரன் அவுட் என போட்டியை தன்வசப்படுத்தினார்.

    இந்த போட்டியின் போது ஜடேஜா உடன் தோனி பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. சிஎஸ்கே அணியின் கேப்டனும் விக்கெட் கீப்பருமான தோனி சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இந்தியில் டிப்ஸ் கொடுத்து வந்தார்.

    விக்கெட் கீப்பிங்கின் போது வெளிநாட்டு வீரர்களுக்கு பந்தை எப்படி போடலாம் என்று தோனி இந்தியில் டிப்ஸ் கொடுத்தார். அதன்படி ஜடேஜாவும் ஆர்சிபி அணியின் வெளிநாட்டு வீரர்களான மேக்ஸ்வெல், டி-வில்லியர்ஸை் வீழ்த்தினார். இதை தொடர்ந்து ஹர்சல் படேல் களமிறங்கினார்.



    ஹர்சல் படேல் கீரிஸ்க்கு வருவதை பார்த் தோனி, நான் இனி உன்னுடன் இந்தியில் பேச முடியாது என்று ஜடேஜாவிடம் தெரிவித்தார். இதை கேட்ட உடன் ஜடேஜாவும் அருகில் ஃபல்டிங் செய்த ரெய்னாவும் வாய்விட்டு சிரித்தனர். தோனியின் இந்த உரையாடல் ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: