Home /News /sports /

சி.எஸ்.கே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தற்போதும் முன்னேற முடியும்... ஆனால் முடிவுகள் இப்படி அமைய வேண்டும்?

சி.எஸ்.கே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தற்போதும் முன்னேற முடியும்... ஆனால் முடிவுகள் இப்படி அமைய வேண்டும்?

சிஎஸ்கே வீரர்கள்

சிஎஸ்கே வீரர்கள்

ஐ.பி.எல் தொடரின் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சி.எஸ்.கே அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற தற்போதும் சில சாத்தியங்கள் உள்ளது.

ஐ.பி.எல் வரலாற்றில் சி.எஸ்.கே அணியின் சாதனை பயணத்தை யாராலும் மறக்க முடியாது. 2016, 2017-ல் சி.எஸ்.கே தடையில் இருந்ததை தவிர மற்ற அனைத்து சீசன்களிலும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. சி.எஸ்.கே இல்லாத ஐ.பி.எல் ப்ளே ஆஃப் யாராலும் நினைக்க முடியாத ஒன்றாக தான் இருக்கும்.

நடப்பு ஐ.பி.எல் சீசன் சி.எஸ்.கே அணிக்கு சாதகமாக இல்லாமல் உள்ளது. 11 போட்டிகளில் விளையாடி உள்ள சி.எஸ்.கே 8 போட்டிகளில் தோல்வியடைந்து 3 வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. ஆனால் தற்போதும் சி.எஸ்.கே அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற சாத்தியம் உள்ளது. அதற்கு சி.எஸ்.கே-வின் வெற்றி மட்டும் போதாது, மற்ற அணிகளின் தோல்வியும் முக்கியமானதாக இருக்கும்.

ப்ளே ஆஃப் சுற்றுக்கு சி.எஸ்.கே தகுதி பெறுவதற்கான சாத்தியம்

முதலில் சி.எஸ்.கே அணி எஞ்சி இருக்கும் 3 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். புள்ளிப்பட்டியிலில் முதல் 3 இடத்தில் இருக்கும் மும்பை, டெல்லி, பெங்களூரு அணிகள் சென்னை தவிர மற்ற அணிகளுடன் வெற்றி பெற வேண்டும். தற்போது புள்ளிப்பட்டியிலில் 4-வது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணி 1 வெற்றிக்கு மேல் பெற கூடாது.

அதேப் போன்று சன்ரைசர்ஸ், பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளின் போட்டிகளும் முக்கியமானது. இந்த அணிகள் 2 வெற்றிக்கு மேல் பெற்றுவிட்டால் சி.எஸ்.கே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாது. சி.எஸ்.கே தற்போது -0.733 ரன்ரேட் உடன் உள்ளதால் அடுத்த 3 போட்டிகளிலும் இமாலய வெற்றி பெற்று ரன்ரேட்டை அதிகரிக்க வேண்டும் என்பது முக்கியத்துவமான ஒன்றாகும்.

கடந்த வருடம் ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் அணி 12 புள்ளிகளுடன் ஐ.பி.எல் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடதக்கது. அதேப்போன்று தற்போதும் சி.எஸ்.கே அணியும் 12 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பிருந்தாலும் அதுப் போட்டியின் முடிவுகளில் தான் உள்ளது.















ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
Published by:Vijay R
First published:

Tags: CSK, IPL 2020

அடுத்த செய்தி