நான் மிகவும் நேசிக்கும் ஒரு தேசம் இப்படி நோயின் துன்பத்தில் வாடுகிறதே: இந்தியாவை நினைத்து கெவின் பீட்டர்சன் வேதனை

நான் மிகவும் நேசிக்கும் ஒரு தேசம் இப்படி நோயின் துன்பத்தில் வாடுகிறதே: இந்தியாவை நினைத்து கெவின் பீட்டர்சன் வேதனை

கெவின் பீட்டர்சன்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தலை விரித்தாடி ஆக்சிஜன் தட்டுப்பாடுகள், எரியும் பிணங்கள், மருத்துவமனையில் இடமின்மை ஏழைகளின் கஷ்டம் என்று மிகவும் துன்பத்தை அனுபவித்து வருவது தன் இதயத்தை நொறுக்கி விட்டது என்கிறார் கெவின் பீட்டர்சன்.

 • Share this:
  ஐபிஎல் 2021 போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்ட அறிவிப்பு வெளியானவுடன் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் இந்தியாவின் நிலையை நிலைத்து உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தலைவிரித்தாட முழு ஊரடங்குக்கு பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது கடந்த 10 தினங்களாக நாளொன்றுக்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவினால் புதிதாகக் பாதிக்கப்படுகின்றனர், மருத்துவமனைகளி இடமில்லை, சுடுகாடுகளில் ஹவுஸ்போல் போர்டு, ஆக்சிஜன் பற்றாக்குறை வாழ்வாதார இழப்பு என்று இந்தியா கடுமையான ஒரு காலக்கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது.

  வெளிநாடுகளிலிருந்தும் தனிநபர்களிடமிருந்தும் உதவிகள் குவிகின்றன. இந்நிலையில் இந்த கொடூரமான துயரத்தில் ஐபிஎல் போட்டிகள் ஒரு பெரிய ஆறுதலாக இருந்து வந்ததோடு, யாரும் அனாவசியமாக வெளியில் செல்வதையும் ஓரளவுக்கு தடுத்து வந்தது. வீட்டிலேயே அமர்ந்திருக்க சீரியல்களும் ஐபிஎல் கிரிக்கெட்டும் உதவின.  ஆனால் ஐபிஎல் வீரர்களின் பயோ-பபுள் என்ற உயிர்ப்பாதுகாப்பு வலையத்தையும் உடைத்துக் கொண்டு கொரோனா வீரர்களை, உதவிப் பணியாளர்களை, பயிற்சியாளரை தாக்கத் தொடங்கியது, இன்று காலை விருத்திமான் சஹாவுக்கு கொரோனா பாசிட்டிவ். இதனையடுத்து வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஐபிஎல் போட்டிகள் கால்வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டன.

  இந்நிலையில் கெவின் பீட்டர்சன் கூறியிருப்பதாவது:

  நான் மிகவும் நேசிக்கும் ஒரு தேசம் இப்படி துயரத்தில் வீழ்ந்திருப்பதைப் பார்க்கும் போது என் இதயம் நொறுங்குகிறது, நிச்சயம் இந்தியா இதனைக் கடந்து வந்து விடும். இதிலிருந்து மீளும் போது இன்னும் வலுவான தேசமாக மீண்டெழுவாய். இந்த நெருக்கடி காலத்திலும் உனது அன்பும், பெருந்தன்மையும் கவனிக்கப்படாமல் போய் விடாது. இன்கிரெடிபிள் இந்தியா என்று பதிவிட்டுள்ளார்.
  Published by:Muthukumar
  First published: