முகப்பு /செய்தி /விளையாட்டு / வார்னரை மைதானத்துக்கே வரக்கூடாது என்ற சன் ரைசர்ஸ்- பிரெட் லீ அதிர்ச்சித் தகவல்

வார்னரை மைதானத்துக்கே வரக்கூடாது என்ற சன் ரைசர்ஸ்- பிரெட் லீ அதிர்ச்சித் தகவல்

பிரெட் லீ

பிரெட் லீ

  • Cricketnext
  • 1-MIN READ
  • Last Updated :

ஆஸ்திரேலியாவின் சிறந்த பேட்ஸ்மென் ஆன டேவிட் வார்னரை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிகவும் மோசமாக நடத்தியது, அவரை மைதானத்துக்கு வரக்கூடாது என்று தடை போட்டனர் என்று பிரெட் லீ அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார்.

ஐபிஎல் 2021 தொடரின் போது முதலில் வார்னரை கேப்டன்சியிலிருந்து நீக்கினர், பிறகு அணியிலிருந்து நீக்கினர் அவரை அவமானப்படுத்தினர், ஒரு பெரிய வீரரை இப்படியா செய்வது என்று பிரெட் லீ கொந்தளித்துள்ளார். ஐபிஎல் 2021 சீசனில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அட்டவணையில் கடைசியில் முடிந்தது. வார்னர் 8 போட்டிகளில் 195 ரன்களை எடுத்தார்.

கடைசி 5 டி20 இன்னிங்ஸ்களில் வார்னர் 17 ரன்களை மட்டுமே எடுத்தார். ஆனால் முன்னாள் வீரர் பிரெட் லீ, வார்னர் நிச்சயம் பேட்டிங் பார்முக்குத் திரும்புவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பிரெட் லீ கூறியதாவது: “அலை மீண்டும் திரும்பும், வார்னர் கிளாஸ் பிளேயர். அவர் தன் தரத்தை ஒரே இரவில் காணாமல் அடித்துக் கொள்ளக் கூடியவர் அல்ல. ஐபிஎல் தொடரில் அவரை மிக மோசமாகவே தொடர் முழுதும் நடத்தினர். முதலில் கேப்டன்சியை பறித்தனர். பிறகு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து நீக்கினர். கிரவுண்டுக்கு வருவதற்கே அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

ஒரு வீரரின் தன்னம்பிக்கையை சிதைக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டுமோ அது அத்தனையும் சன் ரைசர்ஸ் வார்னருக்குச் செய்தது. நிச்சயமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் டாப் வீரராகவே இருந்தார். நான் வார்னரிடமிருந்து பெரிய விஷயங்களை எதிர்பார்க்கிறேன், நிச்சயம் அனைத்தையும் அவர் திருப்புவார்.” என்றார் பிரெட் லீ.

ஆஸ்திரேலியா டி20 உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவை அன்று போராடி வென்றனர். அக்டோபர் 28ம் தேதி இலங்கையை எதிர்கொள்கின்றனர் ஆஸ்திரேலியா. இந்தப் போட்டி துபாயில் நடக்கிறது.

First published:

Tags: David Warner, IPL 2021