ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஒரு மேட்சில் சொதப்பியதற்காக அவரை உட்கார வைப்பதா?- சிஎஸ்கே மீது கைஃப் அட்டாக்

ஒரு மேட்சில் சொதப்பியதற்காக அவரை உட்கார வைப்பதா?- சிஎஸ்கே மீது கைஃப் அட்டாக்

முகமது கைஃப்

முகமது கைஃப்

தோனி சிஎஸ்கேவின் முடிவு மீது முன்னாள் வீரர் முகம்மது கைஃப் கடும் விமர்சனம் வைத்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கடைசி 3 போட்டிகளில் தோனி தலைமை சிஎஸ்கே 2 போட்டிகளில் வென்றதற்குக் காரணம் தோனிதான் என்று அவரது ரசிகர்கள் கூறிக்கொண்டிருக்க டெவன் கான்வே, மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பவுலர்கள் என்று மற்றவர்கள் கூறிவருகின்றனர், இந்நிலையில் முதல் போட்டியில் தொடக்கத்தில் இறங்கி 6 ரன்னில் ஆட்டமிழந்த டெவன் கான்வேயை அதன் பிறகு வரிசையாக உட்கார வைத்து விட்டு பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோகும் நிலையில் அவரை கொண்டு வந்தது பெரிய தவறு என்று முன்னாள் வீரர் முகம்மது கைஃப் சிஎஸ்கேவை சாடியுள்ளார்.

  டெவன் கான்வே மீண்டும் அணியில் எடுக்கப்பட்ட பிறகு சிஎஸ்கேவுக்காக அரைசதங்களை எடுத்தார் நேற்று 49 பந்துகளில் 87 ரன்கள், சதத்தை நழுவ விட்டார். 3 போட்டிகளில் 141 பந்துகளில் 228 ரன்களை அவர் எடுத்துள்ளார், ஸ்ட்ரைக் ரேட் 161.7. ஒருமுறைதான் ஆட்டமிழந்தார். அவரை அணியை விட்டு தூக்கிய முடிவை எடுத்தவர்களுக்கு அவரது கிரிக்கெட் பற்றி ஒரு மண்ணும் தெரியாது என்றே கிரிக்கெட் உலகம் சிஎஸ்கேவை சாடியது.

  இந்நிலையில் முகமது கைஃப் கூறும்போது, “ஒரே ஒரு ஆட்டம் சரியாக ஆடவில்லை, உடனே அவரைப் போன்ற ஒரு வீரரை யாராவது ட்ராப் செய்வார்களா? ஆனால் சிஎஸ்கே அப்படி செய்து பெரும் தவறிழைத்து விட்டது. சிஎஸ்கே நிச்சயம் தவறுக்காக வருந்தியிருக்கும். மிகச்சிறந்த வீரரை வைத்து கொண்டு அவரை சரியாக உபயோகப்படுத்தத் தெரியவில்லை.

  கான்வே கிளாஸ் ப்ளேயர், அனைத்து விதமான ஷாட்களும் அவரிடத்தில் உள்ளன. இவரும் 360 டிகிரி வீரர்தான். அவர் இந்தப் பந்துக்கு இன்ன ஸ்ட்ரோக்தான் ஆடுவார் என்று பவுலர்களால் கணிக்க முடியாது.

  அதே போல் தோனி மீண்டும் கேப்டனானது முக்கியமான மாற்றம், டாஸுக்கு அவர் வரும்போது வித்தியாசத்தை உணர முடிகிறது. ரசிகர்கள் அவரின் பக்கபலம். கேப்டன்சி தன் பக்கம் வந்தவுடன் அணி முழுக்கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது” என்றார் முகமது கைஃப்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Cricket, CSK, Dhoni, IPL 2022