Home /News /sports /

தோனிக்கு எதுவும் சொல்லித் தரத் தெரியாதுங்கறத ஹர்திக் பாண்டியா எத்தனை அழகாச் சொல்றாரு

தோனிக்கு எதுவும் சொல்லித் தரத் தெரியாதுங்கறத ஹர்திக் பாண்டியா எத்தனை அழகாச் சொல்றாரு

பாண்டியா- தோனி.

பாண்டியா- தோனி.

தோனி எப்போதும் நானே தவறு செய்து அதிலிருந்து நானே கற்றுக் கொள்ள வேண்டும் என்று தன்னை சுயம்புவாக விட்டு விட்டதாக ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். அதாவது தோனிக்கு எதுவும் சொல்லித்தரத் தெரியாது என்பதை சூசகமாகத் சுற்றி வளைத்து கூறுகிறாரா ஹர்திக் பாண்டியா?

ஏனெனில் தோனிக்கே தனது பேட்டிங் பார்ம் மழுங்கிப் போகும் போது என்ன செய்வதென்று தெரியாமல் திக்கித் திணறியவர்தானே. பவுண்டரி பந்துகளை எல்லாம் தட்டி விட்டு உயிரை விட்டு சிங்கிள், இரண்டு என்று ஓடுவார், காரணம் தோனி இயல்பான ஒரு ஆக்ரோஷ வீரர் அல்ல, அவர் தான் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் சிக்ஸ் அடிக்கலாம் என்ற மனநிலையில் வளர்ந்து அது முடியாது போன போது பேட்டிங்கில் சொதப்பத் தொடங்கி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து வெளியேறினார்.

பாண்டியா கூறுகையில், தனது கேரியரின் ஆரம்ப நாட்களில், தோனி தனக்கு எப்படி பந்து வீச வேண்டும் என்று ஏன் அறிவுறுத்தவில்லை என்பது எனக்கு விசித்திரமாக இருந்தது, ஆனால் பின்னர் அது தனது சொந்த தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள அனுமதிப்பதே தோனியின் வழி என்பதை உணர்ந்தேன் என்கிறார்,

அதாவது தோனிக்கு இது பற்றி ஒன்று தெரியவில்லை, அல்லது தெரிந்தாலும் சொல்லித் தர தெரியவில்லை, சொல்லித் தர தெரிந்தாலும் மனமில்லை என்பதைத்தான்  பாண்டியா கூறுகிறாரோ என்று ஐயத்தை ஏற்படுத்துகிறது. இதை ஆங்கிலத்தில் Euphemism என்பார்கள்.

ஏனெனில் தோனிக்கே கேப்டன்சியில் ஏகப்பட்ட குழப்பங்கள் உண்டு. ஒருமுறை லார்ட்ஸில் கிரீன் டாப் பிட்சில் முதல் நாள் உணவு இடைவேளைக்குப் பிறகு ரெய்னாவை வீச வைத்தவர்தானே இந்த தோனி எனும் ஸோ கால்டு டாப் கேப்டன். தென் ஆப்பிரிக்காவில் ஒருமுறை புதிய பந்தை எடுத்து தென் ஆப்பிரிக்காவை சுருட்டுவதை விடுத்து பழைய பந்திலேயே 66 ஓவர்கள் கூடுதலாக வீசி, அதாவது ஒரே பந்தில் 146 ஓவர்கள் வீசி சணற்கண்டு வெளியே தெரியும் வரை வீசிய கேப்டன் தானே இந்த தோனி.

ஜெயிக்க வேண்டிய அந்தப் போட்டியை டிரா செய்த பெருமை நம் தோனியைத்தானே சாரும். இதெல்லாம் ரசிகமணிகளுக்குத் தெரியாத புள்ளி விவரங்கள். அஸ்வினுக்கு ஒரு முறை டீப் பாயிண்ட் வைத்து பந்து வீசச்சொன்னவர்தானே இந்த இந்தியாவின் சிறந்த கேப்டன்களில் ஒருவர்!!

இந்நிலையில் ஹர்திக் பாண்டியா கூறுவதைப் பார்ப்போம்:

வெளிப்படையாகவே நான் எல்லோரிடமிருந்தும் நிறைய கற்றுக்கொண்டேன், குறிப்பாக மாஹி பாய். நான் அங்கு சென்றபோது நான் செம்மையடையாதவனாகவே இருந்தேன். அவர்கள் என்னை வளர்த்த விதத்தில், நான் என் சொந்த தவறுகளைச் செய்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று தோனி விரும்பினார்.
முதல் தர கிரிக்கெட்டில், பொதுவாக எல்லா போட்டிகளிலும் உங்களை வழிநடத்தும் மூத்த வீரர் ஒருவர் இருக்கிறார் என்பது பலருக்குத் தெரியாது, இந்திய அணிக்கு வந்தவர்களில் 99.9 சதவீதம் பேர் அந்த வகையைச் சேர்ந்தவர்கள் என்று நான் கருதுகிறேன்.

நான் இந்திய அணியில் அறிமுகம் ஆன போது, ​​​​எம்எஸ் தோனி அங்கு இருக்கிறார் அவர் நமக்கு வழிகாட்டுவார், எனவே எல்லாம் கவனிக்கப்படும் என்று ஆர்வமாக இருந்தேன். ஆனால் மஹி பாய் ஏன் அதிகம் பேசவில்லை, எங்கு பந்து வீச வேண்டும் என்று சொல்லவில்லை என்று நான் ஆச்சரியப்பட்டேன்.ஆனால் பின்னர், நான் சொந்தமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் உண்மையில் விரும்புகிறார் என்பதை உணர்ந்தேன். தோனியின் அந்த நடத்தை அந்த நேரம் எனக்கு புரியவில்லை.

எனது அறிமுகத்தின் போது நான் பவுலிங்கில் 24-25 ரன்கள் (உண்மையில்19 ரன்கள்) கொடுத்தேன், இதனால் என் கதை முடிந்தது இதுதான் இந்தியாவுக்காக நான் ஆடுவது கடைசி என்றே பயந்தேன். ஆனால் பின்னர் தோனி என்னை இரண்டாவது ஓவருக்கு அழைத்தார். நான் எக்ஸ்ட்ரா கவரில் பீல்டிங் செய்து கொண்டிருந்தேன், அவர் அழைத்தது என்னைத்தனா என்பதை உறுதிப்படுத்தும் முன் பின்னால் பார்த்தேன்.

“தோனி அங்கு இருப்பதைக் காட்டவே இல்லை. நான் முரட்டுத்தனமாக இருக்க வேண்டும், எல்லாவற்றையும் சொந்தமாக கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார், ஆனால் அவர் எப்போதும் என் பின்னால் எனக்கு ஆதரவாக நிற்பதை நான் அறிவேன்" என்றார் பாண்டியா.

எதுவுமே சொல்லித்தரல்லங்கறத எத்தனை அழகாச்சொல்றப்பா பாண்டியா,  முட்டு கொடுக்கறதுன்னு கேள்வி பட்டிருக்கோம் இப்பத்தான் நேர்ல பாக்கறோம், அவர் என்ன வச்சுக்கிட்டா வஞ்சனை செய்றாரு -இது நெட்டிசன்கள் மைண்ட் வாய்ஸ்.
Published by:Muthukumar
First published:

Tags: Hardik Pandya, MS Dhoni

அடுத்த செய்தி