ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

IPL mega auction 2022: இந்த ஜூனியர் கிரிக்கெட் வீரர்  பல கோடி ரூபாய்களுக்கு ஏலம் போவார் - அஸ்வின் அடையாளப்படுத்தும் வீரர்

IPL mega auction 2022: இந்த ஜூனியர் கிரிக்கெட் வீரர்  பல கோடி ரூபாய்களுக்கு ஏலம் போவார் - அஸ்வின் அடையாளப்படுத்தும் வீரர்

வருங்கால நட்சத்திரம் யு-19 ஸ்டார் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்.

வருங்கால நட்சத்திரம் யு-19 ஸ்டார் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்.

ஐபிஎல் ஏலம் 2022-ல், நடந்து வரும் U-19உலகக் கோப்பையில் ஒரு நட்சத்திர இந்திய ஜூனியர் வீரர் பல கோடி ரூபாய்களுக்கு ஏலம் போவார் என்று ரவிச்சந்திரன் அஷ்வின் தைரியமாக கணித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஐபிஎல் ஏலம் 2022-ல், நடந்து வரும் U-19உலகக் கோப்பையில் ஒரு நட்சத்திர இந்திய ஜூனியர் வீரர் பல கோடி ரூபாய்களுக்கு ஏலம் போவார் என்று ரவிச்சந்திரன் அஷ்வின் தைரியமாக கணித்துள்ளார்.

அஸ்வின் இந்த யு-19 வேகப்பந்து வீச்சாளரை இஷாந்த் சர்மாவுடன் ஒப்பிட்டார். ஐபிஎல் ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. U-19 உலகக் கோப்பை என்பது பல ஆண்டுகளாக தொடர்ந்து சில பிரகாசமான இளம் வீரர்கள் உலகிற்கு தங்கள் திறமையை வெளிப்படுத்தி பின்னர் உலகின் சில சிறந்த வீரர்களாக மாறுவதற்கான களமாக இருந்து வருகிறது. தோனி,விராட் கோலி உட்பட இந்த பட்டியல் நீளூம்.

சமீபத்திய காலங்களில் யு-19 உலகக்கோப்பை இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2022) அணிகளுக்கு தங்கள் அணிகளுக்காக வரவிருக்கும் சிறந்த திறமைகளை கண்டறியும் வாய்ப்பையும் அளித்துள்ளது.

ஐபிஎல் மெகா ஏலம் இன்னும் இரண்டு வாரங்களில் நடைபெற உள்ள நிலையில், பத்து உரிமையாளர்களும் உலகளாவிய யு-19 உலகக்கோப்பை கிரிக்கெட் ஆட்டங்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், தற்போதைய இந்திய ஜூனியர் அணியில் இருந்து எந்த வீரர் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்படுவார் என்று ஆரூடம் கூறியுள்ளார்.

அஸ்வின் வேகப்பந்து வீச்சாளர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகரைத்தான் ஐபிஎல் ஏலத்தில் அதிக விலை போவார் என்று கூறியுள்ளார். அவரது பந்துவீச்சை அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுடன் ஒப்பிட்டார். மேலும் ஹங்கர்கேகரின் லோயர்-ஆர்டர் பேட்டிங் திறனும் ஏலத்தில் அவரை ஒரு ஹாட் வீரராக ஈர்க்கும் என்கிறார் அஸ்வின்.

அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், “இந்த வீரர் நிச்சயமாக ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படுவார். எந்த உரிமையாளர் என்று என்னால் கணிக்க முடியவில்லை, ஆனால் அவர் நிச்சயமாக வாங்கப்படுவார். அவர் பெயர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்.

அவர் ஒரு வலது கை மீடியம் வேகப்பந்து வீச்சாளர், அவர் இன்ஸ்விங்கரை நன்றாக வீசுவார். தற்போதைய இந்திய வலது கை வேகப்பந்து வீச்சாளர்களில் இஷாந்த் சர்மாவுக்கு மட்டுமே அந்தத் திறமை உள்ளது. அதனால்தான் அவருக்கு தேவை இருக்கும் என்று நான் நினைக்கிறேன்."

மேலும் அவர் ஒரு வலுவான கீழ் மிடில் ஆர்டர் ஹிட்டர். அவர் பந்தை அடிக்கும்போது அவர் உருவாக்கும் சக்தி நம்பமுடியாதது. அவர் குறைந்தது 5-10 கோடிகளை ஈர்க்க வேண்டும் என்று கணிக்கிறேன்” என்றார் அஸ்வின்.

First published:

Tags: ICC world cup, IPL 2022, R Ashwin