Home /News /sports /

ஆச்சரியமான முடிவுகளுக்கு பெயர் பெற்றவர் தோனி... ஜடேஜா 'வெரி குட் சாய்ஸ்'... முன்னாள் இந்திய வீரர் புகழாரம்

ஆச்சரியமான முடிவுகளுக்கு பெயர் பெற்றவர் தோனி... ஜடேஜா 'வெரி குட் சாய்ஸ்'... முன்னாள் இந்திய வீரர் புகழாரம்

தோனி - ஜடேஜா

தோனி - ஜடேஜா

IPL 2022 | Chennai Super Kings | சென்னை அணியில் மூத்த வீரர்கள் பிராவோ, மொயின் அலி மற்றும் இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் ஆகியோர் இருக்கும் போது ஜடேஜா கேப்டன் என்பது நல்ல தேர்வு தான்.

    கிரிக்கெட்டில் ஆச்சரியமான முடிவுகளுக்கு பெயர் பெற்றவர் தோனி என்றும் சிஎஸ்கே அணிக்கு ஜடேஜாவை கேப்டனாக தேர்வு செய்தது 'வெரி குட் சாய்ஸ்' என்றும் முன்னாள் இந்திய வீரர் வாஷிம் ஜாஃபர் புகழ்ந்துள்ளார்.

    ஐபில் 15-வது சீசன் இன்று இரவு 7 மணிக்கு மும்பை வான்டே மைதானத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளன. இந்நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிடம் தோனி ஒரிரு நாட்களுக்கு முன் ஒப்படைத்தார்.

    ஐபிஎல் தொடர் ஆரம்பித்த 2008-ம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி இருந்து வருகிறார். தோனி, ரெய்னாவிற்கு அடுத்தப்படியாக 3-வது வீரராக ஜடேஜா சிஎஸ்கே கேப்டன் பதவியை ஏற்றுள்ளார். தோனி போன்ற ஜாம்பவான் கிரிக்கெட் வீரரிடம் இருந்து கேப்டன் பொறுப்பை ஏற்பது ஜடேஜாவுக்கு சவாலாக உள்ளது. அதுவும் சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற வெற்றிகரமான அணியை வழிநடத்துவது என்பது நெருப்பு மேல் நிற்பது போன்றதாகும்.

    Also Read : ரவீந்திர ஜடேஜா இந்த 5 காரணங்களுக்காக சிஎஸ்கே கேப்டனானார்.. ரூ.100 கோடி சம்பாதித்தார்..!

    இதனிடையே தோனி சிஎஸ்கே கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைத்தது குறித்து முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாஃபர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சிஎஸ்கே கேப்டன் பொறுப்புக்கு ரவீந்திர ஜடேஜா மிகவும் பொறுத்தமானவர். மூன்று வடிவிலான போட்டிகளிலும் அவர் சிறப்பாக விளையாட கூடியவர். இந்திய வீரர் என்பதால் அனைத்து நிபந்தனைகளையும் அறிந்திருப்பார். ஐபிஎல் தொடருக்கு முன் ஒரிரு நாட்களுக்கு முன் இந்த அறிவிப்பு வெளியானது ஆச்சரியம் தான்.

    ஆனால் எம்.எஸ்.தோனி இதுப்போன்று ஆச்சரியமான முடிவுகளை எடுப்பதில் பெயர் பெற்றவர். அவர் ஒரு தன்னலமற்ற கிரிக்கெட் வீரர். அவர் எப்போதும் அணியையும், உரிமையாளர்களையும் தனக்கு மேலே வைத்திருப்பவர். ஜடேஜா வெரி குட் சாய்ஸ். ஆனால் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் போட்டியின் போது தவறு ஏற்பட்டால் தோனி தன்னுடைய மதிப்பான அறிவுரைகளை வழங்குவார்.

    சென்னை அணியில் மூத்த வீரர்கள் பிராவோ, மொயின் அலி மற்றும் இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் ஆகியோர் இருக்கும் போது ஜடேஜா கேப்டன் என்பது நல்ல தேர்வு தான். நான் ஏற்கனவே சிஎஸ்கேவின் புதிய கேப்டன் குறித்து விவாதித்து உள்ளேன். மகேந்திர சிங் தோனி ஒரு நல்ல கேப்டனை தேர்ந்தெடுப்பார் என்று தற்போது அது நிறைவேறி உள்ளது என்றார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: CSK, MS Dhoni, Ravindra jadeja

    அடுத்த செய்தி