Home /News /sports /

IPL 2022: யாரும் அவர் பவுலிங்கை தொட முடியாது, இந்தியாவுக்கு ஆடப்போறாரு- கவாஸ்கர் பாராட்டும் பவுலர்

IPL 2022: யாரும் அவர் பவுலிங்கை தொட முடியாது, இந்தியாவுக்கு ஆடப்போறாரு- கவாஸ்கர் பாராட்டும் பவுலர்

சுனில் கவாஸ்கர்

சுனில் கவாஸ்கர்

அதிவேக பவுலராக இந்தியாவில் உருவாகியிருக்கும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தின் காஷ்மீரத்தைச் சேர்ந்த உம்ரன் மாலிக் மணிக்கு சீராக 150 கிமீ வேகம் மற்றும் அதற்கும் கூடுதலாக வீசி அசத்தி வருகிறார், அவர் நிச்சயம் இந்தியாவுக்காக ஆடப்போகிறார் என்கிறார் சுனில் கவாஸ்கர்.

மேலும் படிக்கவும் ...

    பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஹைதராபாத் அணியின் முந்தைய போட்டியில் ,இன்னிங்ஸின் இறுதி ஓவரில் மூன்று விக்கெட்டுகள் உட்பட நான்கு விக்கெட் வீழ்த்தினார் உம்ரன் மாலிக். இப்போதைய பேச்சு உம்ரன் மாலிக் தான். ஆனால் யார்க்கர் நடராஜனும் அருமையாகவே வீசி வருகிறார், யார்க்கர் நடராஜனின் பவுலிங்கில் இன்னும் துல்லியமும் தீர்க்கமும் உறுதியும் அதிகரித்துள்ளது.

    ஆனால் இப்போதைய ‘டாக் ஆஃப் த டவுன்’ உம்ரன் மாலிக் தான், அயல்நாட்டு வீரர்கள் கவனத்தியும் ஈர்த்துள்ளார் உம்ரன் மாலிக், இந்நிலையில் கவாஸ்கர் இவரை யாரும் ஆட முடியாது என்று விதந்தோதியுள்ளார்.

    உம்ரன் மாலிக்

    கவாஸ்கர் இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்சில் கூறும்போது, “உம்ரான் மாலிக் அவரது வேகத்தில் மிகவும் ஈர்க்கக்கூடியவர், ஆனால் அவரது வேகத்தை விட, அது அவரது துல்லியம் அதிகம் ஈர்க்கிறது. அந்த வேகத்தில் பந்து வீசும் நிறைய பேர் பந்தை கன்னாபின்னாவென்று வீசுவார்கள் ஆனால் உம்ரன் மிகவும் குறைவான வைட் பந்துகளையே வீசுகிறார்.

    லெக் சைடுக்கு வெளியே வைடுகளை அவரால் கட்டுப்படுத்த முடிந்தால், அவர் ஒரு அற்புதமான பந்து வீச்சாளராக இருப்பார், ஏனென்றால் அவர் எல்லா நேரத்திலும் ஸ்டம்புகளைத் தாக்கிக்கொண்டே இருப்பார், மேலும் அவரது வேகத்தில் நேராக அடிப்பது எளிதல்ல. அவர் ஸ்டம்ப் டு ஸ்டம்ப் வீசினால், அவர் விளையாட முடியாத பந்துவீச்சாளராக மாறுவார். அவர் இந்தியாவுக்காக விளையாடப் போகிறார்” என்றார்.
    Published by:Muthukumar
    First published:

    அடுத்த செய்தி