Home /News /sports /

IPL 2022- ரிஷப் பண்ட் ஒரு குழந்தை... - கூறுகிறார் ஷோயப் அக்தர்

IPL 2022- ரிஷப் பண்ட் ஒரு குழந்தை... - கூறுகிறார் ஷோயப் அக்தர்

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) இடையேயான போட்டியின் போது, ​​ராஜஸ்தான் பந்துவீச்சாளர் ஓபேட் மெக்காய் வீசிய ஃபுல் டாஸை நடுவர் நோ-பால் என்று அழைக்காததால் ரிஷப் பண்ட் கடும் கோபமடைந்து தனது வீரர்களை மைதானத்தை விட்டு வெளியேறுமாறு சைகை செய்தார். இது குழந்தைத் தனமான செயல் என்கிறார் ஷோயப் அக்தர்.

மேலும் படிக்கவும் ...

    கடைசி ஓவரில் டெல்லி வெற்றிக்கு 36 ரன்கள் தேவை என்ற நிலையில், ஆர்ஆர் வேகப்பந்து வீச்சாளர் ஓபேட் மெக்காய்வின் முதல் மூன்று பந்துகளையும் சிக்ஸர்களுக்கு விளாசினார் டெல்லி அதிரடி பினிஷர் ரோவ்மன் போவெல், மூன்றாவது பந்தில் ஃபுல்-டாஸ் ஆனது, இடுப்பில் சிக்னல் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்த பந்த் மகிழ்ச்சியடையவில்லை.கடுப்பானார்.

    ரிஷப் பண்டின் இந்தச் செயல், நடுவரின் முடிவுக்கு எதிராகச் செல்வது விளையாட்டின் உணர்வுக்கு எதிரானது என்று கருதிய பல கிரிக்கெட் வீரர்களிடமிருந்து விமர்சனங்களை ஈர்த்தது.

    இந்தச் சம்பவம் குறித்து ஷோயப் அக்தரும் தன் அனுபவம் வாயிலாக கையை நனைக்கிறார்:

    “நான் ஆடும் காலக்கட்டத்திலும் எனக்கும் நிறைய ஏற்றுக் கொள்ள முடியாத விஷயங்கள் நடந்துள்ளன, ஆனால் நடுவர்கள், அதிகாரிகளை பகைத்துக் கொள்ள மாட்டேன். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் சில நேரங்களில் சில இடங்களில் நாம் பெரிய மனிதராக நடந்து கொள்ள வேண்டும்.

    ரிஷப் பண்ட் ஒரு குழந்தை, மிக இளம் வீரர், உணர்ச்சி மோதும். எனக்கு அவரது அறிவுரை என்னவெனில் அது போன்ற அதி உண்ர்ச்சிகர சூழ்நிலையில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதே. பண்ட் அங்கு குழந்தைத்தனமான ஒரு தவறைச் செய்து விட்டார்.

    அவர் குழந்தை அவரிடம் கேப்டன்சி வந்துள்ளது. அவருக்கு ஆட்டம் மீது அவ்வளவு பற்றுதல் இருக்கிறது, அதில் சந்தேகமில்லை. அவர் திறமை மிக்கவர், பெரிய கரியர் அவருக்கு இருக்கிறது. ஷேன் வாட்சன் அவரை சர்ச்சையில் சிக்காமல் காப்பாற்ற முயல்கிறார்.

    அது நோ-பால் தான். அது கரெக்ட். பண்ட் இதில் சரியாகவே கணித்தார். ஆனால் நடுவரை எதிர்த்து வீரர்களை திரும்ப அழைக்கக் கூடாது” என்றார் ஷோயப் அக்தர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Delhi Capitals, IPL 2022, Rishabh pant

    அடுத்த செய்தி