ஐபிஎல் 2022- ‘பேபி’ ஏ.பி.டிவில்லியர்ஸ் - கே.எல்.ராகுல் புகழும் இளம் வீரர்
ஐபிஎல் 2022- ‘பேபி’ ஏ.பி.டிவில்லியர்ஸ் - கே.எல்.ராகுல் புகழும் இளம் வீரர்
கே.எல்.ராகுல்
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இளம் வீரரான பதோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தார். இவரை லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல், ஒரு குட்டி ஏ.பி.டிவில்லியர்ஸ் என்று புகழ்ந்து பேசினார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இளம் வீரரான பதோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தார். இவரை லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல், ஒரு குட்டி ஏ.பி.டிவில்லியர்ஸ் என்று புகழ்ந்து பேசினார்.
மும்பை வான்கடே மைதானத்தில் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நேற்று மோதின. முதலில் ஆடிய லக்னோ அணி 29 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இதனால் அந்த அணி 100 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விடும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். இந்நிலையில் 5-வது விக்கெட்டுக்கு தீபக் ஹூடா மற்றும் பதோனி ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பதோனி சேவாக் போல் சிக்சரில் அரைசதம் என்ற மைல்கல்லை எட்டினார்.
அந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்தனர். இறுதியில் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தீபக் ஹூடா 55 ரன்களும் பதோனி 54 ரன்கள் எடுத்தனர்.
குஜராத் அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக முகமது சமி தேர்வு செய்யப்பட்டார். அவர் 4 ஓவரில் 25 ரன்களை விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
போட்டி முடிந்த பிறகு பேட்டியில் லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் இளம் வீரரான பதோனியை பாராட்டியுள்ளார். மேலும் 41 பந்துகளில் 54 ரன்கள் எடுத்த அவரை ஏபி டிவில்லியர்ஸ் உடன் ஒப்பிட்டுள்ளார். அவர் எங்களின் குட்டி ஏபி டிவில்லியர்ஸ். அவர் முதல் நாள் பேட்டிங் செய்யும் போது நம்ப முடியாத வகையில் இருந்தது. அவரால் அனைத்து திசையிலும் பந்தை அடிக்க முடியும் என கேஎல் ராகுல் புகழாரம் சூட்டினார்.
"“எங்களுக்கு அவர் (பதோனி) குழந்தை ஏபி. டிவில்லியர்ஸ் முதல் நாளில் இருந்தே அசத்தினார். 360 டிகிரி விளையாடுகிறார், அந்த வாய்ப்பைப் பெற்றதில் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. அவரை 4 விக்கெட்டுகள் விழுந்தவுடன் இறக்கியது உகந்ததாக இல்லை, ஆனால் அவர் அழுத்தத்தின் கீழ் நன்றாக ஆடினார். சவாலை எதிர்கொண்டார். அவர் அதைத் தொடர முடியும் என்று நம்புகிறேன், ”என்று ராகுல் கூறினார்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.