ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

அர்ஜுன் டெண்டுல்கர் இன்னும் தேற வேண்டும்- உண்மையை உடைத்த ஷேன் பாண்ட்

அர்ஜுன் டெண்டுல்கர் இன்னும் தேற வேண்டும்- உண்மையை உடைத்த ஷேன் பாண்ட்

அர்ஜுன் டெண்டுல்கர்

அர்ஜுன் டெண்டுல்கர்

மும்பை இந்தியன்ஸ் அணியில் ரூ.30 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்ட அர்ஜுன் டெண்டுல்கர் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை, இது அனைவருக்கும் பெரிய கேள்விகளையும் ஐயங்களையும் ஏற்படுத்த மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சுப் பயிற்சியாளர் ஷேன் பாண்ட் அர்ஜுன் டெண்டுல்கர் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  மும்பை இந்தியன்ஸ் அணியில் ரூ.30 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்ட அர்ஜுன் டெண்டுல்கர் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை, இது அனைவருக்கும் பெரிய கேள்விகளையும் ஐயங்களையும் ஏற்படுத்த மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சுப் பயிற்சியாளர் ஷேன் பாண்ட் அர்ஜுன் டெண்டுல்கர் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

  சச்சின் டெண்டுல்கர், அர்ஜுன் ஆடுவது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தின் முடிவு என்று கையை விரித்து விட ஷேன் பாண்ட் இப்போது உண்மையை உடைத்துள்ளார். அதாவது அர்ஜுன் டெண்டுல்கர் இன்னும் நிறைய கடினமாக உழைத்து, கடும் பயிற்சி செய்து தன் பேட்டிங்கையும் பீல்டிங்கையும் மேம்படுத்த வேண்டும் என்கிறார் ஷேன் பாண்ட்.

  இந்நிலையில் ஸ்போர்ட்ஸ்கீடா தளத்துக்கு பேட்டியளித்த ஷேன் பாண்ட், “அவர் இன்னும் கொஞ்சம் வேலை செய்ய வேண்டியுள்ளது, மும்பை இந்தியன்ஸ் போன்ற அணியில் இருப்பது வேறு, ஆடும் 11 வீரர்களில் தேர்வு செய்யப்படுவது என்பது வேறு.

  அவர் இன்னும் கிரிக்கெட்டில் மேம்பட வேண்டியுள்ளது. இன்னும் நிறைய நிறைய அவர் உழைக்க வேண்டியுள்ளது. இந்த மட்டத்தில் அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற ஒன்று இருந்தாலும் அந்த வீரரும் தன்னை தேர்வு செய்யுமாறு தன் இடத்தை அவர்தான் சம்பாதித்துக் கொள்ள வேண்டும்.

  அர்ஜுன் இன்னும் தன் பேட்டிங்கையும் பீல்டிங்கையும் மேம்படுத்த வேண்டியுள்ளது. அவர் இதில் மேம்பாடடைந்து தன் இடத்தை தானே வெல்வார் என்று நான் நம்புகிறேன்.” என்றார் ஷேன் பாண்ட்.

  ஆகவே அர்ஜுன் டெண்டுல்கரை ஏன் எடுக்கவில்லை என்பதற்கு கிரிக்கெட் காரணங்கள் தானே தவிர வேறு எதுவும் இல்லை என்பதை ஷேன் பாண்ட் தெளிவுபடுத்திவிட்டார். 2 சீசன்களாகி விட்டது மும்பை இந்தியன்சில் அர்ஜுன் இணைந்து, ஆனால் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு அளிக்கப்படாததற்கு அவர் போதாமைதான் காரணம் என்பது இப்போது புரிகிறது.

  Published by:Muthukumar
  First published:

  Tags: IPL 2022, Sachin tendulkar