Home /News /sports /

ஆர்சிபி சத நாயகன் ரஜத் படீதார்- ‘அப்பப்பா!’ - விராட் கோலி ஆச்சரியம்

ஆர்சிபி சத நாயகன் ரஜத் படீதார்- ‘அப்பப்பா!’ - விராட் கோலி ஆச்சரியம்

ரஜத் படீதார்- கோலி

ரஜத் படீதார்- கோலி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையேயான ஐபிஎல் 2022 எலிமினேட்டருக்குப் பிறகு விராட் கோலி மற்றும் ரஜத் படீதார் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். டி20 லீக் வரலாற்றில் தான் பார்த்த மிகச்சிறந்த தாக்கம் ஏற்படுத்திய இன்னிங்ஸ்களில் ஒன்று என படீதாரின் ஆட்டமிழக்காமல் 112 ரன்கள் இன்னிங்சை விராட் கோலி விதந்தோதினார். கேப்டன் ஃபாப் டுபிளெசிஸும் படீதாரை புகழ்ந்தார்.

மேலும் படிக்கவும் ...

    இது தொடர்பாக ஐபிஎல் இணையதளத்தில் வெளியான வீடியோவில் விராட் கோலி, “நான் எத்தனையோ தாக்கம் தரும் இன்னிங்ஸ்களை பார்த்திருக்கிறேன் ரஜத் படீதாரின் இந்த இன்னிங்ஸ் ஏற்படுத்திய தாக்கம் போல் நான் வேறு எதையும் உணர்ந்ததில்லை. அழுத்தம், பெரிய போட்டி, பிளே ஆஃப் சுற்றில் இந்தியாவுக்காக ஆடாத ஒரு வீரர் சதம் எடுக்கிறார். இது பிரம்மாண்டம். எனக்கே பதற்றமாகவும் படபடப்பாகவும் இருந்தது. ” என்றார் விராட் கோலி.

    ஆரிசிபி கேப்டன் ஃபாப் டு பிளெசிஸ் கூறும்போது, “இது ஒரு சிறப்பான நாள், வீரர்கள் ஆட்டத்திறனை வெளிப்படுத்தி சமயத்தில் எழுச்சி பெற்றார்கள். ரஜத் படீதார் போன்ற ஒரு இளம் வீரர் இந்த நேரத்தில் சதமடிக்கிறார் என்றால் அது சாதாரணமல்ல. அவர் அதைக் கொண்டாடிய விதமும் அவரது விவேகத்தையும் நிதானத்தையும் காட்டியது. ஐபிஎல் கிரிக்கெட்டில் நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த செஞ்சுரி இதுதான்” என்றார் டுபிளெசிஸ்.

    நாளை, அதாவது மே 27ம் தேதி இதைவிடவும் பெரிய பரீட்சை இருக்கிறது, ஆர்சிபிக்கு இதிலும் படீதார் தேறி விட்டால் அவர் விரைவில் இந்திய அணிக்கு ஆடும் நாள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ரஜத் படீதார் 28 வயது நிரம்பிய மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வீரர். 39 முதல் தர போட்டிகளில் ஆடி 7 சதம், 14 அரைசதம் எடுத்துள்ளார், 43 லிஸ்ட் ஏ போட்டியில் ஆடியுள்ளார். 48 டி20 போட்டிகளில் ஆடிஉள்ளார். ஆஃப் பிரேக் வீசுவார் என்று பெயர் ஆனால் இதுவரை வீசியதில்லை.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022, RCB, Virat Kohli

    அடுத்த செய்தி