ஐ.பி.எல் 2020 போட்டி அட்டவணை வெளியானதா?

ஐபிஎல் கோப்பை

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறவுள்ளநிலையில், போட்டிகளுக்கான அட்டவணையை பி.சி.சி.ஐ இதுவரையில் வெளியிடவில்லை.

 • Share this:
  கொரோனோ பரவல் காரணமாக மார்ச் 29-ம் தேதி தொடங்கவிருந்த ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

  உலகம் முழுவதும் கொரோனோ பரவல் வீரியம் எடுக்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன. நான்கு மாதங்களுக்கு பிறகு கொரோனோவை கட்டுக்குள் கொண்டுவந்த இங்கிலாந்து போட்டியை நடத்தி வெற்றியும் கண்டுள்ளது. இதன் எதிரொலியாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த பிசிசிஐ தீவிரம் காட்டியது.

  ஐ.பி.எல். போட்டியை நடத்த உலகக் கோப்பை, ஆசிய கோப்பை தொடர்கள் தடையாக இருந்தன. அக்டோபரில் தொடங்கவிருந்த டி20 உலகக் கோப்பை தொடரை நடத்துவது தொடர்பான முடிவு எடுக்க ஐ.சி.சி காலம் தாழ்த்தி வந்தது.

  இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு உலகக் கோப்பை டி20 தொடரை அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பதாக ஐசிசி அறிவித்தது.இதனை அடுத்து, பிசிசிஐ கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி ஐ.பி.எல் தொடரை செப்டம்பர் 19 முதல் நவம்பர் 9 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. துபாய், ஜார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் போட்டி நடைபெறும் எனவும் ஐ.பி.எல் குழு தலைவர் பிரிஜீஷ் படேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

  இந்தநிலையில், ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற முழு அட்டவணை வெளியிடப்பட்டதாக ஒரு அட்டவணை இணையத்தில் உலவியது. இதுவரையில், பி.சி.சி.ஐ தரப்பில் அதிகாரப்பூர்வமாக ஐ.பி.எல் போட்டிகள் தொடர்பான அட்டவணை வெளியிடப்படவில்லை.
  Published by:Vijay R
  First published: