• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • உன்னுடைய நல்ல பந்தை பேட்ஸ்மேன் அடிக்கிறார் என்றால்..- ஹர்ஷல் படேலுக்கு ஏ.பி.டிவில்லியர்ஸ் கொடுத்த அட்வைஸ்

உன்னுடைய நல்ல பந்தை பேட்ஸ்மேன் அடிக்கிறார் என்றால்..- ஹர்ஷல் படேலுக்கு ஏ.பி.டிவில்லியர்ஸ் கொடுத்த அட்வைஸ்

டிவில்லியர்ஸ்- ஹர்ஷால் படேல்

டிவில்லியர்ஸ்- ஹர்ஷால் படேல்

  • Share this:
    ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு ஆடும் ஹர்ஷல் படேல், லெஜண்ட் ஏ.பி.டிவில்லியர்சுடன் ஒரே ஓய்வறையைப் பகிர்ந்து கொண்ட அதிர்ஷ்டம் பெற்றவர், நேற்று முதல் டி20 போட்டியிலேயே நியூசிலாந்துக்கு எதிராக ஆட்ட நாயகன் விருது பெற்ற ஹர்ஷல் படேல் போட்டியையே மாற்றியதில் பெரும்பங்கு வகித்தார்.

    ஏ.பி.டிவில்லியர்ஸ் கிரிக்கெட்டிலிருந்து ஒட்டுமொத்தமாக விடைபெறுவதாக நேற்று உணர்ச்சிகரமாக அறிவித்தார். அவருடன் ஓய்வறையைப் பகிர்ந்து கொண்டது அவருடன் உரையாடியது என்று ஹர்ஷல் படேலுக்கு ஏகப்பட்ட அனுபவம் கிடைத்துள்ளது, அதை மனம் திறந்து பகிர்ந்துள்ளார் அவர்.

    “ஏ.பி.டிவில்லியர்ஸ் என் கிரிக்கெட் வாழ்வில் மிகப்பெரிய தாக்கம் செலுத்தியவர். அவரை நான் அமைதியாகக் கூர்ந்து கவனித்து வந்துள்ளேன். சமீபத்தில் யுஏஇ.யில் ஐபிஎல் போட்டியின் போது நான் அவரிடம் கேட்டேன், ‘நான் சமயங்களில் ஓவருக்கு 12-15 ரன்களை ஏன் 20 ரன்களையே கொடுக்கும் ஓவர்களை மோசமாக வீசுகிறேன் இதைக் கட்டுப்படுத்துவது எப்படி?’ என்று கேட்டேன்.

    அதற்கு ஏ.பி.டிவிலியர்ஸ் இவ்வாறு கூறினார், “எந்த ஒரு பேட்டரும் உன்னுடைய நல்ல பந்தை அடித்து விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம், உடனே நாம் அந்தப் பந்தை வீச வேண்டாம் என்று மாற்றி வீசுவோம் அப்படிச் செய்யக்கூடாது, நல்ல பந்துகளை அடித்தால் அதை மாற்றி வேறு விதமாக வீசுவது கூடாது, நீ எப்போதும் உன்னுடைய நல்ல பந்துகளையே பேட்டர்கள் அடிக்குமாறு வீச வேண்டும்.

    நல்ல பந்தை அடிக்கிறார் என்று நீ மாற்றி வீசினால் அதை பேட்ஸ்மென் எதிர்பார்த்து சரியாகக் கணிப்பார், தொடர்ந்து அடி வாங்க வேண்டியதுதான். எனவே நல்ல பந்துகளை எப்போதும் அடித்துக் கொண்டே இருக்க முடியாது, ஒரு பந்து அவரது விக்கெட்டை உனக்கு அளிக்கும், ஆனால் மாற்றினால் அடி வாங்க வேண்டியதுதான்’ என்றார் டிவில்லியர்ஸ். இந்த ஆலோசனைதான் ஐபிஎல் 2வது சுற்றில் என்னிடம் தங்கியது, இந்த அட்வைஸ் என் வாழ்நாள் முழுதும் என்னுடன் இருக்கவே செய்யும்” என்றார் ஹர்ஷல் படேல்

    ஐபிஎல் தொடரில் ஏ.பி.டிவில்லியர்ஸ் 14 ஆண்டுகள் ஆடியுள்ளார், 184 போட்டிகளில் 5,162 ரன்களை விளாசியுள்ளார். இதில் 3 சதங்களும் 40 அரைசதங்களும் அடங்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: