விளையாட்டு

  • associate partner

இனவெறிக்கு எதிராக முழங்காலிட்ட ஹர்திக்.. பட்டியலின மக்களுக்காக குரல் கொடுக்க முடியுமா? சீறும் நெட்டிசன்ஸ்

ஹர்டிக் பாண்டியா இனவெறிக்கு எதிராக முழங்காலிட்டதை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனும் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரருமான பொலார்டு எழுந்து நின்று கைதட்டி வரவேற்றார்.

இனவெறிக்கு எதிராக முழங்காலிட்ட ஹர்திக்.. பட்டியலின மக்களுக்காக குரல் கொடுக்க முடியுமா? சீறும் நெட்டிசன்ஸ்
ஹர்திக் பாண்டியா
  • Share this:
ஐ.பி.எல் தொடரில் இனவெறிக்கு எதிராக முழங்காலிட்ட ஹர்திக் பாண்டியா, பட்டியலின மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்க முடியுமா என்று நெட்டிசன்கள் பலர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

ஐ.பி.எல் 2020 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த மும்பை அணி வீரர் ஹர்டிக் பாண்டியா இனவெறிக்கு எதிராக முழங்காலிட்டு தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

ஹர்டிக் பாண்டியா இனவெறிக்கு எதிராக முழங்காலிட்டதை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனும் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரருமான பொலார்டு எழுந்து நின்று கைதட்டி வரவேற்றார். ஹர்திக் பாண்டியாவின் செயலுக்கு கிரிக்கெட் உலகில் பெரும் வரவேற்பு கிடைத்தது. ஐ.பி.எல் தொடரில் முதன்முறையாக இனவெறிக்கு எதிரான குரலை ஹர்திக் பாண்டியா எழுப்பி உள்ளார்.


அதேபோல் அதற்கு எதிர்மறையான பதிவுகளும் தற்போது நெட்டிசன்களிடமிருந்து கிளம்பியுள்ளது. இனவெறிக்காக குரல் கொடுக்கும் ஹர்திக் பாண்டியா இந்தியாவில் பட்டியலின சமூகத்தினருக்கும், பெண்களுக்கும் எதிராக நடைபெறும் வன்கொடுமைக்கு எதிராக குரல் கொடுக்க முடியமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.இனவெறிக்கு எதிராக குரல் கொடுத்த ஹர்திக் பாண்டியாவிற்கு எதிர்ப்பும், ஆதரவும் இணையத்தில் வலுத்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: October 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading