நம் கால விவ் ரிச்சர்ட்ஸ்: சேவாகிற்கு ஹர்பஜன் சல்யூட்

சேவாக்.

சேவாக் ஓய்வு பெற்று சில ஆண்டுகள் ஆனாலும் சேவாகின் அதிரடி இன்னிங்ஸ்கள் இன்னமும் கூட ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்று வருகின்றன. அவர் ஒரு போட்டோவைப் பகிர்ந்தால் ரசிகர்கள் அவரது பேட்டிங் குறித்த நினைவு ஏக்கங்களுடன் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

 • Share this:
  சேவாக் ஓய்வு பெற்று சில ஆண்டுகள் ஆனாலும் சேவாகின் அதிரடி இன்னிங்ஸ்கள் இன்னமும் கூட ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்று வருகின்றன. அவர் ஒரு போட்டோவைப் பகிர்ந்தால் ரசிகர்கள் அவரது பேட்டிங் குறித்த நினைவு ஏக்கங்களுடன் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

  கிரிக்கெட் எழுத்தாளர் மறைந்த பீடர் ரீபக் ஒருமுறை சேவாகை போஸ்ட் மாடர்ன் கிரிக்கெட் வீரர் என்றார். போஸ்ட் மாடர்ன் என்றால் மரபை மீறுவது. அல்ட்ரா மாடர்ன் அல்ல, இது நவீனத்துவத்தை கடந்த பின் நவீன பேட்டிங். காரணம் பேட்டிங்கிற்கென்று பிரத்யேகமாக உள்ள விதிமுறைகளை சேவாக் உடைத்தார்.

  சேவாக் - ரோகித் சர்மா.


  டெஸ்ட் மேட்சில் முதல் ஒரு மணி நேரம் பார்த்து ஆட வேண்டும், பந்து புதிதாக இருக்கும் போது நன்றாக ஊனிக்கொண்டால் பிறகு அடிக்கலாம், முன் காலை தூக்கிப் போட்டு ஒன் டூ, த்ரீ கவர் ட்ரைவ் ஆடுவது, அதே போல் ஒன் டூ, த்ரீ பேக்புட் புல் ஷாட் ஆடுவது போன்ற கோச்சிங் மேனுவலை உடைத்தவர் விரேந்திர சேவாக். அதனால்தான் அவர் போஸ்ட் மாடர்ன் கிரிக்கெட்டர் என்று பீட்டர் ரீபக்கினால் அழைக்கப்பட்டார்.   
  View this post on Instagram

   

  A post shared by Virender Sehwag (@virendersehwag)


  சேவாக் ஒரு பேட்டிங் அதிசயம்தான். வலைப்பயிற்சியில் முழுதும் டிபன்ஸ் ஆடுவார் மேட்சில் ஷாட்களை ஆடுவார், ஒருமுறை ஆஸ்த்ரேலியாவில் அடிலெய்டில் உணவு இடைவேளைக்குப் பிறகு பவுண்டரியே அடிக்காமலும் ஆடி சதம் எடுத்துள்ளார், மே.இ.தீவுகளில் உணவு இடைவேளைக்கு முன்பாக 99 நாட் அவுட் என்று சென்றுள்ளார், உணவு இடைவேளைக்கு முன் சதமெடுப்பது ஒரு சாதனை என்று கூட சேவாகுக்குத் தெரியாது, அந்த அளவுக்கு தன்னலமற்ற ஒரு அதிரடி வீரர் சேவாக்.

  சேவாக்


  இலங்கைக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் அஜந்தா மெண்டிஸ் என்ற புதிர் ஸ்பின்ன்ர் இந்திய நட்சத்திரங்களை வேட்டையாடிக் கொண்டிருந்த போது ஒரு முனையில் இவர் மட்டும் 200 அடித்து கடைசி வரையில் நாட் அவுட்டாகத் திகழ்ந்ததை மறக்க முடியுமா?

  இந்நிலையில் சேவாக் தன் இன்ஸ்டா பக்கத்தில் தன் டெஸ்ட் போட்டோ ஒன்றை பகிரப்போக அதைத் தொடர்ந்து பலரும் நெகிழ்ச்சியுடன் கமெண்ட் போட்டனர். பலரும் மீண்டும் நீங்கள் வர வேண்டும் என்றனர்.

  ஹர்பஜன் சிங்.


  ஹர்பஜன் சிங் சேவாகின் இந்த பகிர்வுக்கு கமெண்ட் போட்ட போது ‘மாடர்ன் டேஸ் விவ் ரிச்சர்ட்ஸ்’ என்று பதிவிட்டார்.

  விவ் ரிச்சர்ட்ஸும் பவுலரைப் பற்றி கவலைப்பட மாட்டார், பந்து பிட்ச் ஆகும் இடத்தைத்தான் பார்ப்பார். சேவாகும் பந்து பிட்ச் ஆகும் இடத்தைத்தான் பார்ப்பார், இருவருமே ‘பந்தைப் பார் அடி’ ரக பேட்ஸ்மென்கள். இதே ஆண்டர்சன் ரிச்சர்ட்ஸுக்கு வீசியிருந்தால் அலறியடித்துக் கொண்டு ஓடியிருப்பார். ஏனெனில் சேவாக் ஒருமுறை அவரை காய்ச்சி எடுத்தார்.
  Published by:Muthukumar
  First published: