• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Harbhajan Singh | உயிருக்குப் போராடும் குழந்தைக்கு உதவி கேட்டு ஹர்பஜன் சிங் முறையீடு- நெட்டிசன்கள் நெகிழ்ச்சி

Harbhajan Singh | உயிருக்குப் போராடும் குழந்தைக்கு உதவி கேட்டு ஹர்பஜன் சிங் முறையீடு- நெட்டிசன்கள் நெகிழ்ச்சி

ஹர்பஜன் சிங்.

ஹர்பஜன் சிங்.

உயிரைப் பறிக்கும் நோய் ஒன்றில் அவதியுறும் யுவான் என்ற குழந்தைக்காக நன்கொடை கேட்டு இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தன் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். 

  • Share this:
    சமூக ஊடகங்களில் மிகவும் செயல்பூர்வமாக உற்சாகமாக ஈடுபடுபவர் ஹர்பஜன் சிங். இவர் வியாழனன்று மேற்கொண்ட ட்விட்டர் பதிவில் தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் விதமாக தேவையுள்ளவர்களுக்கு அனைவரும் தங்களால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும் என்று முறையிட்டுள்ளது ரசிகர்களின் பாராட்டுகளை குவித்துள்ளது.

    ஹர்பஜன் தன் ட்வீட்டில், “எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தால் மனக்கவலையின்றி மன அழுத்தமின்றி வாழலாம். நீங்கள் யோகா செய்தாலும் சரி செய்யாவிட்டாலும் சரி. பிறருக்கு உதவுங்கள், எப்போது உதவி தேவைப்படுகிறதோ அப்போது பிறருக்கு உதவுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

    இதனையடுத்து அவருக்கு பின்னூட்டம் போட்ட நெட்டிசன்கள், ‘உதவி செய்வதை மக்கள் மறந்து விட்டனர்’என்று வருத்தம் தெரிவித்து சிலர் பதிவிட்டனர்.

    இன்னொரு நெட்டிசன், “நல்ல வாழ்க்கைக்கு உங்களின் இந்த அறிவுரை அவசியமானது. ஆனால் வெட்கம் கெட்டுப்போய் பணத்தின் பின்னால் மனிதர்கள் ஓடிக்கொண்டிருக்கின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.



    சமீபத்தில் ஹர்பஜன் சிங்,  முதுகெலும்பு தசைநார் சிதைவு நோயுடன் போராடிக் கொண்டிருக்கும் யுவான் என்ற ஒன்றரை குழந்தையின் மருத்துவச் செலவுக்காக நன்கொடை கோரி வீடியோ வெளியிட்டிருந்தார்.  இந்த முதுகெலும்பு தசைநார் சிதைவு ஏற்பட்டால் உடல் இயக்கம் இருக்காது, முடங்கிப் போய்விடும். இதற்கு மிகவும் அதிக விலை கொண்ட மருந்து தான் சிகிச்சைக்கு உதவும். இந்த மருந்தின் விலை 2.1 மில்லியன் டாலர்கள் அதாவது சுமார் ரூ.16 கோடியாகும்.

    இதனால் கிரவுட் ஃபண்டிங் மூலம் திரட்டப்படும் நன்கொடைக்கான இணைப்பைப் பகிர்ந்த ஹர்பஜன் சிங், “பேபி யுவான் ஒரு அபாயகரமான நோயுடன் போராடி வருகிறார். இதற்குத் தேவை Zolgensma இதன் விலை 2.1 மில்லியன் டாலர்கள். ஆகவே ரூ.50, 100, 10 ரூபாய் உதவி கூட கைகொடுக்கும்” என்று ஹர்பஜன் பதிவிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஹர்பஜன் சிங்கின் இந்த உதவும் பேருள்ளம் கண்டு ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: