• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து ஹர்பஜன் திடீர் விலகல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து ஹர்பஜன் திடீர் விலகல்

ஹர்பஜன் சிங் விலகல்

ஹர்பஜன் சிங் விலகல்

ஐபிஎல் 2018-தொடருக்கு முன் சிஎஸ்கே அணி ஹர்பஜனை அவரது அடிப்படை விலை ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது. 

  • Share this:
    40 வயதாகும் இந்திய முன்னாள் ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து தான் விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர்  தன் ட்விட்டர் பக்கத்தில், “சிஎஸ்கே உடனான என் ஒப்பந்தம் முடிவடைகிறது. இந்த அணிக்கு ஆடியது ஒரு  பேரனுபவம். அழகான நினைவுகள்... வரும் ஆண்டுகளில் நான் இனிமையாக நினைத்துப் பார்க்கும் நட்புகளை இங்கு வளர்த்துக் கொண்டேன். அனைவருக்கும் நன்றி. சென்னை ரசிகர்களுக்கு நன்றி, வொண்டர்ஃபுல் 2 ஆண்டுகள். ஆல் த பெஸ்ட்” என்று ட்விட் செய்துள்ளார்.

    யுஏஇ-யில் நடந்த கடந்த ஐபிஎல் தொடரில் ஹர்பஜன் சிங் தனிப்பட்ட காரணங்களுக்காக பங்கேற்கவில்லை.

    ஐபிஎல் 2018-தொடருக்கு முன் சிஎஸ்கே அணி ஹர்பஜனை அவரது அடிப்படை விலை ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது.


    ஜலந்தரைச் சேர்ந்த ஹர்பஜன் சிங், ஐபிஎல் தொடரில் ஒரு நட்சத்திர வீரராக வலம் வந்தார். 160 போட்டிகளில் 150 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஒரு போட்டியில் 18 ரன்களுக்குக் 5 விக்கெட்டுகள் எடுத்தது இவரது சிறப்பான பந்து வீச்சாகும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: