• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Happy Birthday ரிஷப் பந்த்: அதிரடி வீரரின் டாப் இன்னிங்ஸ்கள்

Happy Birthday ரிஷப் பந்த்: அதிரடி வீரரின் டாப் இன்னிங்ஸ்கள்

ரிஷப் பந்த்

ரிஷப் பந்த்

இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் ரிஷப் பந்த் த 24வது பிறந்த தினத்தை இன்று கொண்டாடுகிறார். இந்த இளம் வயதில் அனைத்து வடிவங்களிலுமே பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்து வருகிறார்.

  • Share this:
    இன்றைய டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டி விறுவிறுப்பாக ஆடி ரசிகர்களை மைதானத்துக்கு அழைத்து வரும் ஒரு அதிரடி வீரர் ரிஷப் பந்த் ஆவார். இவரது சமீபத்திய இன்னிங்ஸ்கள் இந்தியாவுக்கு டெஸ்ட் அரங்கில் வெற்றிகளைப் பெற்று தந்துள்ளது, அதாவது சிறிய வயதில் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் செல்வதினால் இவர் மீது உலக அரங்கில் ஏகப்பட்ட மதிப்பு கூடியுள்ளது. அவரது சிறந்த இன்னிங்ஸ்கள் சிலவற்றைப் பார்ப்போம்:

    இங்கிலாந்துக்கு எதிராக எடுத்த 114:

    2018 தொடரில் இந்திய அணி சிக்கலில் இருந்து வந்த போது ரிஷப் பந்தின் இந்த சதம் அணியின் ஸ்பிரிட்டையே தட்டி எழுப்பியது. இந்தத் தொடரின் கடைசி, 5வது டெஸ்ட் போட்டியில் தான் யார் என்பதைக் காட்டினார் ரிஷப் பந்த். டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக சதம் எடுத்தார் ரிஷப் பந்த். அதுவும் இந்த 114 ரன்களை அதிரடி முறையில் 146 பந்துகளில் எடுத்தார் ரிஷப் பந்த்.

    DC vs Mi


    இந்த இன்னிங்ஸில் 15 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என்று கில்கிறிஸ்டை நினைவுட்டுமாறு ஆடினார். ஆனால் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற முடியவில்லை. இங்கிலாந்து 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரிலும் இங்கிலாந்து வென்றது, இந்தியா ஒரு டெஸ்ட் போட்டியில்தான் வென்றது.

    ரிஷப் பந்த்-கங்குலி


    சிட்னியில் 159 நாட் அவுட்:

    விராட் கோலி கேப்டன்சியில் துணைக்கண்டத்துக்கே பெருமை தேடித்தந்த ஆஸ்திரேலியா தொடரில் இந்தியா 2-1 என்று ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் ஆஸ்திரேலியாவை பந்தாடினார், 159 ரன்கள் குவித்தார். இதை அடிக்க 189 பந்துகளே எடுத்துக் கொண்டார். இதில் 15 பவுண்டரி 1 சிக்சர் அடங்கும். இவர் அடித்த இந்தப் பெரிய சதத்தினால் இந்தியா 622 ரன்களை விளாசியது. ஆட்டம் டிரா ஆனாலும் இந்தியா 2-1 என்று வென்றது.

    ரிஷப் பந்த்


    இதோடு அடுத்த தொடரில் 36 ஆல் அவுட் ஆன பிறகு தோல்வி அடைந்து அவமானத்தைச் சந்தித்த நிலையில் மெல்போர்னில் அபார வெற்றி பெற இந்திய அணி 1-1 என்று தொடரை சமன் செய்தது. சிட்னி டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 406 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்த பிறகு ரிஷப் பந்த் 97 அதிரடி ரன்களை எடுக்க இந்திய அணி வெற்றியை நோக்கி பிரமாதமாகச் சென்றது, ஆஸ்திரேலியாவுக்கு கிலி பிடித்துக் கொண்டது, ஆனால் இவர் ஆட்டமிழந்தவுடன் அஸ்வின், ஹனுமா விகாரி பிரமாதமாக ஆடி ட்ரா செய்தனர்.

    ரிஷப் பந்த்.


    இதே தொடரில் பிரிஸ்பனில் பெற்ற வெற்றியை மறக்கத்தான் முடியுமா? கடைசி நாளில் கடினமான பிட்சில் அபார ஆஸ்திரேலிய பந்து வீச்சுக்கு எதிராக 89 ரன்களை விளாசியதை மறக்க முடியுமா கடைசியில் ஹேசில்வுட் பந்தை மிட் ஆஃபில் பவுண்டரி அடித்து வென்ற மகிழ்ச்சியைத்தான் மறக்க முடியுமா?இந்தியா தொடரை கோலி இல்லாமலேயே 2-1 என்று வெற்றி பெற்றது.

    ட்விட்டரில் ரிஷப் பந்த் பகிர்ந்த படம்.


    இந்த இன்னிங்ஸ்களோடு ரிஷப் பந்த் இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் சிக்சர் மழையில் எடுத்த அரைசதம் மற்றும் அகமதாபாத்தில் எடுத்த சதம் ஆகியவற்றை மறக்க முடியாது, இந்த டெஸ்ட்டில் இந்தியா வென்றது, ஆண்டர்சனை ரிவர்ஸ் ஸ்வீப் அடித்தார், அதிவேக பவுலர் ஜோப்ரா ஆர்ச்சரை புனேயில் ரிவர்ஸ் ஷாட்டில் பவுண்டரி அடித்தார் ரிஷப் பந்த்.

    இத்தகைய நட்சத்திரப் பிறந்தநாளில் நாமும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்போமே.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: