இருட்குகையின் முடிவில் வெளிச்சம் இருக்கவே செய்யும்: அஸ்வின் நன்றி

Ashwin

இங்கிலாந்து தொடரில் ஒரு போட்டியில் கூட ஆடாமல் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படும் அஸ்வினுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக மீண்டும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அதாவது உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் அஸ்வின்.

 • Share this:
  இங்கிலாந்து தொடரில் ஒரு போட்டியில் கூட ஆடாமல் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படும் அஸ்வினுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக மீண்டும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அதாவது உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் அஸ்வின்.

  அஸ்வின் கடைசியாக ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக களமிறங்கியது 2017-ல், மே.இ.தீவுகளுக்கு எதிராக நார்த் சவுண்ட் மேட்சில். அதே மே.இ.தீவுகளுக்கு எதிராக கிங்ஸ்டனில் 2017ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி கடைசி டி20 போட்டியில் ஆடுகிறார், இப்போது 4 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைத்தது. 3 வடிவங்களிலும் ஒரு வீரர் ஆடினார் என்றால் அடுத்த கேப்டன்சி ஆளுமை என்று பொருள், கோலி அதை விரும்பவில்லை, நம்பர் 2 இருக்கக் கூடாது என்பதுதான் அவரது எண்ணப்போக்கு. அஸ்வினை ஒழித்தார்.

  இந்நிலையில் டி20 உலகக்கோப்பையில் அஸ்வின் இடம்பெற்றது பலருக்கும் ஆச்சரியம். அதுவும் ஆர்சிபி சக வீரர் யஜுவேந்திர செகல் இல்லாமல் அஸ்வினைத் தேர்வு செய்தது பெரிய ஆச்சரியம், செகல் தலையில் இடி. நடராஜன் அணித்தேர்வின்மையும் பலருக்கும் வேதனை அளித்துள்ளது, ஆனால் மிகவும் பாவம் பிரிதிவி ஷா, பிரமாதமாக ஆடியும் அவர் பெயர் சேர்க்கப்படாதது துரதிர்ஷ்டமே.

  இந்நிலையில் அஸ்வின் தான் குறைந்த ஓவர் கிரிக்கெட்டுக்கு மீண்டும் தேர்வு செய்தது பற்றி கூறும்போது, “மகிழ்ச்சியும் நன்றியும். இந்த 2 வார்த்தைகள்தான் என்னை இப்போது விளக்குகிறது.” என்றார்.

  ஆனால் அவர் ஷேர் செய்திருந்த படத்தில் ஒரு மேற்கோள் வாசகம் இருந்தது அதில், “ஒவ்வொரு இருட்குகையின் முடிவிலும் ஒளி இருக்கும். ஆனால் ஒளி இருப்பதை நம்புவர்களுக்கு மட்டும்தான் அது தெரியும்” என்பதே அந்த வாசகம், இது தொடர்பாக அஸ்வின் கூறும்போது, “இந்த மேற்கோளை என் டைரியில் பலலட்சம் தடவை எழுதியிருக்கிறேன். இப்போது போஸ்ட்டில் போட்டுள்ளேன். நாம் பாராட்டும் இத்தகைய உண்மையான மேற்கோள்களை மனவயப்படுத்தி வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தும் போது அந்த மேற்கோள்களுக்கு சக்தி பிறக்கும்” என்றார் அஸ்வின்.

  அஸ்வினை டெஸ்ட் தொடரில் இப்போது லெவனில் தேர்வு செய்யாததற்கு கோலிக்குக் காரணங்கள் இருக்கலாம். ஆனால் எந்தக் காரணமும் ஒரு வீரனின் மனவேதனைக்கு ஈடாக முடியாது.
  Published by:Muthukumar
  First published: