தோனிக்கு அன்பளிப்பு வழங்கக் காத்திருக்கும் ஈரோடு நெசவாளர்

போர்வையில் ஓவியம்

கைத்தறி போர்வையில் தோனி தனது மகளுடன் இருப்பதுபோன்ற உருவத்தை வரைந்த கைத்தறி தொழிலாளி, தோனியை நேரில் சந்தித்து அதைக் கொடுக்க ஆர்வமாக உள்ளதாகக் கூறியுள்ளார்.

 • Share this:
  ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியைச் சேர்ந்தவர் அப்புசாமி. கைத்தறி நெசவாளரான இவர், கிரிக்கெட்டின் சச்சினின் தீவிர ரசிகராக இருந்தார். சச்சின் ஓய்வுக்குப் பிறகு தோனியின் ஆட்டத்தால் ஈர்க்கப்பட்டு அவரின் ரசிகராக மாறினார். தோனியின் கிரிக்கெட்டைத் தாண்டி அவர் தன் மகளுடன் கொண்டிருக்கும் உறவைப் பெரிதும் விரும்புவதாக அவர் கூறுகிறார்.

  கைத்தறி தொழில் செய்யும் அப்புசாமி, தோனி தனது மகளுடன் இருப்பது போன்று நெய்யப்பட்ட கைத்தறி போர்வையை உருவாக்கினார். 25 நாட்கள் உழைத்து உருவாக்கிய அந்தப் போர்வையை இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது நேரில் சந்தித்து அன்பளிப்பாக வழங்க திட்டமிட்டிருந்த அப்புசாமிக்கு டோனி ஓய்வு பெறுவதாக வெளியான அறிவிப்பு அதிர்ச்சியளித்தது.  இந்நிலையில், அவரை நேரில் சந்தித்து அந்த அன்பளிப்பைக் கொடுக்க ஆர்வமாக இருப்பதாக அப்புசாமி தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு சச்சின் 100 சதம் அடித்தபோது கைத்தறி போர்வையில் 100 சச்சின் உருவம் கொண்ட போர்வையை உருவாக்கி சச்சினுக்கு அனுப்பி வைத்தாகவும், இதைக்கண்டு மகிழ்ந்த சச்சின் தனது குடும்பத்தாரை நேரில் வரவழைத்து வாழ்த்தியதாகவும் தெரிவித்தார்.
  Published by:Rizwan
  First published: