Home /News /sports /

பாண்டியா கேப்டன்ஷிப், ரஷீத்கான் பவுலிங்கில் குஜராத்: பட்லர், சாஹலுடன் ராஜஸ்தான்- கோப்பையை வெல்லப் போவதுயார்?

பாண்டியா கேப்டன்ஷிப், ரஷீத்கான் பவுலிங்கில் குஜராத்: பட்லர், சாஹலுடன் ராஜஸ்தான்- கோப்பையை வெல்லப் போவதுயார்?

image courtesy @BCCI

image courtesy @BCCI

ஐ.பி.எல் 2022 லீக் போட்டிகளில் முதல் இரண்டு இடத்தில் வலுவாக இருந்த குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

    நடப்பாண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மகுடம் சூடப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று களைகட்டவுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக விருந்து படைத்த ஐபிஎல் திருவிழா முடிவிற்கு வந்துள்ளது.

    சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி ஞாயிறு இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைடன்ஸ் அணியும் - சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன

    நடப்பு சீசனின் லீக் மற்றும் முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் இரு அணிகளும் மோதியதில் குஜராத் அணியே வெற்றியை வசப்படுத்தியுள்ளது.

    லீக் போட்டிகளில் 10 வெற்றிகளை குவித்து முதலிடம் பிடித்த குஜராத், தகுதி சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. சொந்த மைதானத்தில் போட்டி நடைபெறுவது குஜராத் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

    புதிய அணியாக களம்கண்டு புள்ளிப்பட்டியலில் டாப்பராக வலம்வந்து, முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றும் முனைப்பில் குஜராத் வீரர்கள் விளையாடவுள்ளனர்.

    ஹர்த்திக் பாண்டியாவின் திறமையான கேப்டன்ஷிப், இந்திய அணியின் செலக்டர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

    ஓபனிங் சொதப்பினாலும் ஃபினிசிங்கில் மாயஜாலம் நிகழ்த்தி வெற்றிகளை குவிப்பதில் குஜராத் வீரர்கள் கில்லாடிகளாக திகழ்கின்றனர்.

    கில்லர் மில்லர் மிடில் ஆர்டரில் களமிறங்கி எதிரணியின் பந்துவீச்சை பறக்கவிடுவது ரசிகர்களை இருக்கையின் நுணிக்கே வரவழைக்கிறது.

    பந்துவீச்சில் ரஷித் கான் அணியின் தூணாக திகழ்கிறார். பவர்பிளேயில் விக்கெட் வேட்டை, ரன்களை கட்டுப்படுத்துவதில் அசத்தல் என சமி எதிரணிக்கு சிம்ம சொப்பணமாக உள்ளார் .

    ஓபனிங்கில் களமிறங்கும் சஹா - கில் ஜோடி சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பதால் பினிசிங்கில் நெருக்கடி இல்லாமல் ரன் குவிக்க வசதியாக அமைகிறது.

    குஜராத் அணியுடன் தகுதிச்சுற்று போட்டியில் அடைந்த தோல்விக்கு இறுதிபோட்டியில் பழிதீர்க்க காத்திருக்கிறது ராஜஸ்தான்.

    லீக் போட்டிகளில் ஒன்பது வெற்றிகளை குவித்து பட்டியலில் இரண்டாமிடம் பிடித்த ராஜஸ்தான் முதல் தகுதிச்சுற்றில் தோல்வி, இரண்டாவது தகுதிச்சுற்றில் வெற்றி என இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.

    ஆரஞ்ச் கேப் பட்லர் நடப்பு தொடரில் மட்டும் நான்கு சதங்களை பதிவு செய்து அசுரபலத்தில் உள்ளார். பட்லர் களத்தில் இருந்தால் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு திண்டாட்டமே. இளம் நாயகன் ஜெய்ஷா, சஞ்சு சாம்சன், படிக்கல், ஹெட்மயர் என அதிரடி பேட்ஸ்மேன்கள் இருப்பது அணியின் பலத்தை அதிகரித்துள்ளது.

    பர்ப்பிள் கேப் நாயகன் சஹல் நடப்பு தொடரில் மட்டும் 26 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். குஜராத்திற்கு ரஷித் கான் என்றால் ராஜஸ்தானுக்கு சஹல். வேகத்தில் மிரட்டும் போல்ட், பிரசித், மெக்காய் மூவரும் ஃபார்மில் இருப்பது ராஜஸ்தான் பந்துவீச்சு பலத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

    2008 முதல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ராஜஸ்தான் 14 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை கையில் ஏந்த காத்திருக்கிறது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Gujarat Titans, IPL 2022, Rajasthan Royals

    அடுத்த செய்தி