ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பவுலிங்கில் ஒரே ஓவரில் 4 விக்கெட், பேட்டிங்கில் 7 பந்துகளில் 40 ரன்கள்... தெறிக்கவிட்ட ரஷல்.. ஆனாலும் கேகேஆர் தோல்வி

பவுலிங்கில் ஒரே ஓவரில் 4 விக்கெட், பேட்டிங்கில் 7 பந்துகளில் 40 ரன்கள்... தெறிக்கவிட்ட ரஷல்.. ஆனாலும் கேகேஆர் தோல்வி

KKR vs GT

KKR vs GT

KKR vs GT | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ஐபிஎல் தொடரின் 15-வது சீசனில் 35-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், விருதமான் சஹா களமிறங்கினார்கள். சுப்மன் கில் 7 பந்துகளில் சவுதி பந்துவீச்சில் அவுட்டாக விருதமான் சஹா 25 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். குஜராத் அணியின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் கேப்டன் ஹர்திக் பாண்டியா 49 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார். இதனால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது.

  குஜராத் அணிக்கு எதிராக கடைசி ஓவரை ரஷல் வீசினார், முதல் இரண்டு பந்துகளிலும் கடைசி இரண்டு பந்துகளில் தொடர்ச்சியாக விக்கெட்டை வீழ்த்தினார். ஒரு ஓவர் மட்டுமே வீசிய ரஷல் 5 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதனால் குஜராத் அணியின் ரன்வேகம் குறைந்தது.

  இதையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி ஆரம்பம் முதலே விக்கெட்களை பறிகொடுத்து தடுமாறியது. சாம் பில்லிங்ஸ், சுனில் நரைன், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா என அடுத்தடுத்து அவுட்டாகினர்.

  கொல்கத்தா அணி இறுதி ஓவர்களில் ரஷல் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் இறுதி ஓவரில் கேகேஆர் வெற்றி பெற 18 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை அல்ஷார் ஜேசாப் வீசினார். முதல் பந்தில் ரஷல் சிக்ஸர் பறக்கவிட ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அடுத்த பந்திலேயே ரஷல் பவுண்டரி எல்லையில் கேட்ச் கொடுத்து அவுட்டனார். இதனால் கேகேஆர் அணியின் வெற்றி கனவு தகர்ந்தது. அடுத்தடுத்த பந்துகளில் இலக்கை எட்ட முடியாமல் 8 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா தோல்வியை சந்தித்தது.

  Also Read : விதிமுறை மீறி மோசமானசெயல்பாடு.. ரிஷப் பந்திற்கு ரூ.1.15 கோடி அபராதம்

  கொல்கத்தா அணி வீரர் ரஷல் 25 பந்துகளில் 6 சிக்ஸர் 1 பவுண்டரி உட்பட 48 ரன்கள் சேர்த்தார். பவுண்டரிகளில் மட்டும் 7 பந்துகளில் 40 ரன்களை பறக்கவிட்டார். ரஷலில் அதிரடியால் கேகேஆர் அணி வீரர்கள் உற்சாகத்தில் இருந்த போது பவுண்டரி எல்லையில் அவர் அவுட்டனாது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

  குஜராத் அணி இந்த தொடரில் தனது வெற்றி பாதையில் தொடர்ந்து பயணித்து கொண்டிருக்கிறது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி உள்ள குஜராத் டைட்டன்ஸ் ஒரு தோல்வியை மட்டும் சந்தித்து 12 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதனால் ப்ளே ஆப் சுற்றுக்கு குஜராத் அணி முன்னேறும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

  Published by:Vijay R
  First published:

  Tags: IPL 2022, KKR